சனி, 28 பிப்ரவரி, 2009

தனிமை

தனிமையை நீங்கள் உணர்ந்து இருக்கின்றீர்களா ? தனிமையில் இருக்கும் எல்லா நேரமும் நீங்கள் தனிமையை உணர்ந்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே நேரத்தில் தனிமையில் இருக்கும் போது மட்டும் தான் நீங்கள் தனிமையை உணர்ந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.மனம் ஒன்றாமல் கட்டாயத்தின் பேரிலோ அல்லது வேறு வழி இல்லாமலோ நீங்கள் உங்கள் நெருக்கமானவர்களோடு சேர்ந்து வசிக்கும் போது கூட நீங்கள் தனிமையை உணர்ந்து இருக்கலாம். என்ன கொழப்புகிறேனோ ? எது எப்படியோ நான் இப்போது தனிமையை உணருகிறேன். சித்திரை மாத வெயில் போல தனிமை என் உடல் முழுதும் பரவி எங்கும் வியாபித்து இருக்கிறது. இதற்க்கு முன்பு எனக்கு இப்படி தோன்றியது இல்லை.

பலமுறை நான் தனித்து வாழ்ந்து இருந்து இருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு கிட்ட தட்ட 5 வருடங்கள் நான் தனித்து தான் இருந்தேன் .. அப்போது அது ஒரு பெரிய பாரமாக எனக்கு தோன்றியது இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த தனிமை மிகவும் பிடித்து இருந்தது. அப்பொழுது எனக்கு திருமணம் ஆகி இருக்க வில்லை. மனைவியின் கத கதைப்பை நான் அறிந்து இருக்க வில்லை. அதனால் ஒருவேளை எனக்கு அந்த தனிமை பிடித்து இருந்து இருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு கூட சுமார் இரண்டு வருடங்கள் நான் தனித்து இருந்து இருக்கிறேன். அப்பொழுது கூட இந்த தனிமை இவ்வளவு சுமையாக எனக்கு தெரிந்ததில்லை. நானும் இரண்டு நாட்களாக எதனால் இந்த முறை இந்த தனிமை ரொம்ப படுத்துகிறது என்று யோசித்து பார்க்கிறேன். எனக்கு என்னவோ என் குழந்தையின் பிரிவு தான் இத்தனை பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்று தோன்றுகிறது. வீடு முழுதும் குழந்தயின் விளையாட்டு பொருட்கள் இறைந்து கிடக்கின்றன. அவை ஒவ்வொரு நிமிடமும் என் மகளை நினைவு படுத்தி கொண்டே இருக்கிண்டறன. இதற்கு முன்பு எனது வீடு இவ்வளவு அமைதியாக இருந்ததே இல்லை. எனது மகளும் அவளுடைய விளையாட்டு பொருட்கள், அவளக்கு பிடித்தமான கார்டூன்கள் ஏதாவது சத்தத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். ஆனால் இந்த வீடு இப்பொழுது ரொம்பவே அமைதியாக இருக்கிறது. இந்த மயான அமைதி மனதை பிசைகிறது. எனது விரலை பிடித்து கொண்டு "மின்னா மின்னா "என்று சுற்றி சுற்றி ஓடும் மகள் எனது அருகில் இப்பொழுது இல்லை என்று நினைக்கும் போது தனிமை இருக்கிறேன் என்கிறது. இரவில் என் கழுத்தின் மேல் கை போட்டு அப்பா ஸ்டோரி னேனும் என்று கேட்கும் கொழந்தை என் அருகில் இப்பொழுது இல்லை என்ற உண்மை நகைக்கும் போது தனிமை உரைக்கிறது. என்ன தான் தொலைபேசியில் பேசினாலும் வீடியோ சாட்டிங் பண்ணினாலும் கொழந்தையை வாரி அனைத்து கொஞ்சுவது போல் வருமா ?

இந்த தனிமைய பற்றிய இந்த கட்டுரை என்னுடைய புலம்பலுக்காக இல்லை. இது நன்றாக யோசித்து நன்கு அலசி ஆராய்ந்து எடுத்த முடிவு. என்னுடைய இந்த தனிமை தற்காலிகமானது. இதை வைத்து நான் நாட்களை கடத்தி விடுவேன். ஆனால் ஒரு கட்டத்தில் பலருக்கு இந்த தனிமை நிரந்தரமானது என்ற நிலை வரக்கூடும். அவர்கள் எப்படி இந்த தனிமையை எதிர் கொள்கிறார்கள் ?

ஒரு கட்டத்தில் மனைவியை கணவனும் கணவனை மனைவியும் இழந்தாக வேண்டும். இருவரில் யாராவது ஒருவர் முதலில் டிக்கெட் வாங்கியாக வேண்டும். இந்த இழப்பு பேரிழப்பு. இந்த தனிமை தான் கொடியது. பெரும்பாலும் கணவனை இழந்த மனைவி ஒரு தருணத்தில் மகன், மகள், மருமகன், மருமகளுடன் கலந்து விடுகிறாள். அன்றாட வேலைகளில் மூழ்கி ஒரு தருணத்தில் இந்த தனிமையை மறந்து விடுகிறாள். உறவுகள் எப்பொழுதாவது பழிக்கும் போது புலம்பி அழ துணை இல்லையே என்று நினைத்து அழுகிறாள். என்னை ராணி போல பார்த்து கொண்ட என் கணவர் இப்பொழுது இல்லையே, நானும் அவருடன் சென்று இருக்க மாட்டேனோ என்று புலம்புகிறாள். அனால் காலப்போக்கில் இதை மறந்து மீண்டும் அன்றாட வேளைகளில் இறங்கி விடுகிறாள். இவர்களுடைய தனிமையை காலம் மெதுவாக மறக்கடித்து விடுகிறது.

மனைவியை இழந்த கணவன் பாடு தான் மிகவும் பரிதாபம். ஒரு பெண்ணை போல் ஒரு ஆணால் உறவுகளுடன் நெருக்கமாக முடிவது இல்லை. மனைவி கணவனை பார்த்து கொண்டது போல் உறவுகள் தம்மை கவனிக்க வில்லையே என்ற குறை ஆணுக்கு இருந்து கொண்டே இருக்கும். கணவனுக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்று முன் கூடியே அறிந்து கணவனின் மனம் போன போக்கில் வளைந்து கொடுத்து அவருக்கு பிடித்த மாதிரி பார்த்து கொள்பவள் மனைவி மட்டுமே. இந்த சலுகையை மனைவியிடம் இருந்து மட்டும் தான் எதிர் பார்க்க முடியும். இதை மற்ற உறவுகளிடிமிரிந்து எதிர் பார்க்க முடியாது. இந்த நேரத்தில், கணவன் உறவுகளுடன் வளைந்து கொடுத்து போக வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மனகசப்பு, விரிசல், மற்றவர்களிடம் எனது மகன்/மகள் என்னை சரியாக கவனிப்பது இல்லை என்ற புலம்பல் எல்லாம் நேரிடிகிறது. இந்த தனிமை தான் மிகவும் கொடியது. நான் முன்பு சொன்னது போல, இங்கு இந்த ஆண் மகன் உறவுகளுடன் சேர்ந்து வசித்தாலும் அவர்களுடன் ஒன்ற முடியாமல் சொல்லி அழ உற்ற துணையும் இல்லாமல் போகும் பொது இவன் தனிமையை நன்றாக உணருகிறான். இந்த தனிமை தான் மிகவும் கொடியது. என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.?