செவ்வாய், 1 ஜனவரி, 2013

2012 ஒரு டைரி குறிப்பு

2012 எப்படிங்கோ ? நமக்கு டக்கருங்கன்னா  ! 

ஆம்!. இந்த வருட பாதியில் அலுவல் காரணமாக லண்டனுக்கு பயணம் செய்து கடந்த ஆறு மாதங்களாக இங்கிருந்து தான் வேலை செய்து வருகிறேன். ஒரு புதிய சூழல், ஒரு புதிய மாற்றம்  எல்லாருக்கும் மிகவும் அவசியம் என்றே நான் எண்ணுகிறேன், இல்லையென்றால வாழ்க்கை  ஒரு தேக்க நிலையில் இருப்பதாகவே  தோன்றும். இந்த வருடமும் இன்போசிஸ் கம்பனியின் அதே வாடிக்கயளருக்காக தான் வேலை செய்தேன். பதவி உயர்வு, அயல் நாட்டு வேலை, வேலைக்கான பாராட்டு எல்லாம் சேர்ந்து கடந்த வருட அலுவலை நிறைவாகவே வைத்து இருந்தது.

அனன்யா, தான்யவிற்க்கு ஒரு வயது பூர்த்தி ஆனது. இருவரும் கவிழ்ந்து, தவிழ்ந்து,முட்டு போட்டு நடந்து, விழுந்து, எழுந்து நடை பழகியதை பக்கத்தில் இருந்து பர்ர்த்து மகிழ முடிந்தது. இந்த பாக்கியம் எனக்கு ஸ்ரேயா விழயத்தில் கிடைக்க வில்லை. இருவருக்கும் இன்னும் பல் வர வில்லை, பேச்சும் வரவில்லை, ஆனால் சேட்டை நிறைய வந்து இருக்கிறது. இருவரும் நன்றாக விரல் சூப்பிகிறார்கள்.  இருவர் சூப்பும் விரல்கள் தான் வேறு வேறு. Gangam style பாட்டு போட்டால் அழுகையை அந்த ஸ்பாட்டில் நிப்பாட்டிவிட்டு அடுத்த நொடியில் சிரித்துக்கொண்டு தலையை ஆட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும், எப்படி இந்த பட்டு youtube ஹிஸ்டரியில் highest viewed video ஆனது என்று. தான்யா எல்லாவற்றையும் சாப்பிட பார்க்கிறாள், பேப்பர் , குப்பை உட்பட. ஆனால் சொல்வதை எளிதாக புரிந்து கொள்கிறாள். 'வாயில என்ன இருக்கு கொடு' என்று சொன்னால் வாயை திறந்து  பாதி சவைத்த பேப்பரை எடுத்து கொடுத்து விடுகிறாள்.. இல்லையென்றால் தனது வாயிற்குள் இரண்டு பெரிய விரல்கள் சென்று காயபடுத்தும் என்று தெரிந்து இருக்கிறது போலும். சோனியா காந்தி போல அடிக்கடி கையை ஆட்டி சிரிக்கிறாள்.  அனன்யா வீட்டில் மிகவும் சமத்து ஆனால் குழந்தை வண்டியில் ஒட்கார மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.. எப்பொழுதும் தூக்கி வைத்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

முன்பு எங்களுடைய முழு கவனமும் ஸ்ரேயா ஒருத்தியிடம் மட்டும் தான் இருந்தது.. ஆனால்  அது இப்பொழுது மூன்றாக பிரிந்து இருக்கிறது, இது ஸ்ரேயாவிற்கும் புரிந்து இருக்கிறது. அம்மா அருகில் படுத்துக்கொள்ள வேண்டும், அம்மா மடி வேண்டும் என்று எப்பொழுதும் ஆசைபடுகிறாள், ஆனால் அது கிடைக்காத போது சிறிது வருத்தப்பட்டாலும் எடுத்து சொல்லும் போது  புரிந்து கொள்கிறாள்.  பெரும்பாலான நேர மற்றும் கவணம்  மெனுக்கிடல் இந்த இரட்டை குழந்தைக்களுக்கு செல்வதால், பெரும்பாலான நேரங்களில் ஸ்ரேயா தானாகவே தன்னுடைய காரியங்களை பார்த்து கொள்கிறாள்.  இந்த வயதிற்கு, இந்த புரிதல் அறிது என்றே நான் எண்ணுகிறேன். இது எங்களுக்கு சில சமயம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஸ்ரேயா இப்பொழுது Year 2 செல்கிறாள். கலாச்சார மாற்றம், மொழி, புதிய சூழ்நிலை, இவைகளை இவள் எப்படி எதிர் கொள்ள போகிறாள் என்று மிகவும் பயந்தேன், ஆனால் நான் பயந்த மாதிரி ஆகாமல், இவளால் மிக எளிதாக இந்த சூழ்நிலையுடன் ஒன்றி போக முடிந்து விட்டது. சில சமயங்களில் இவளுடைய british english  எனக்கு புரிவது இல்லை.  ஆனால் இங்கு இவர்கள் பாடம் சொல்லி கொடுக்கும் முறை முற்றிலும் வேறாக இருக்கிறது. பாடம் படித்தல் பள்ளியில் மட்டும் தான். பள்ளிக்கு மதிய உணவுடன் மட்டும் சென்றால் போதும், புத்தகம், நோட்டு, பென்சில், எதுவும் வேண்டாம்.  பள்ளியில் படிப்பு இவர்களுடைய சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது.  'முயல்', 'பொந்து' என்ற இரண்டு வார்த்தைகளை  வைத்துகொண்டு சொந்தமாக ஐந்து வாக்கியங்கள் அமைக்க சொல்கிறார்கள். ஐந்து வாக்கியங்களை மனப்பாடம் செய்து எழுதி மிக அதிக மதிப்பெண் பெற்ற ஸ்ரேயாவிற்கு இது கடினமாக இருக்கிறது. ஆனால் இதுவும் பழகி போகும் என்றே நான் நம்புகிறேன்.  

கிட்டத்தட்ட 10 வருடங்கள் அலுவலகம் சென்று ஓடி ஆடி வேலை செய்த சௌம்யாவிற்கு  சென்ற வருடம் (2012) ஒரு புது அனுபவம். அலுவல் வேலையே மூட்டை கட்டி வைத்து விட்டு முழு நேர குடும்ப 'இஸ்த்ரி'யாக குழந்தைகளையும் என்னையும் பார்த்து கொண்டாள். இரண்டு கை கொழந்தைகள், இன்னொரு பள்ளி செல்லும் கொழந்தை, அவளது படிப்பு, வீட்டு வேலைகள் இவை அனைத்தையும் மிக நேர்த்தியாக, இலகுவாக கையாளுவது கண்டு பல முறை நான் ஆச்சர்யபட்டு இருக்கிறேன். இவள் வீட்டை பார்த்து கொள்வதினால் தான் நான் எந்த கவலையும் இல்லாமல் அலுவலுக்காக அலுவல்  பளுவை சுமக்க முடிகறது. 

சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் விளையாட்டாக ஆரம்பித்த www.subbuskitchen.com வலை தளம் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்ததாகவே நினைக்கிறேன். 1200 visitors per day  , 5000 page views per day , 3800 facebook  likes  என்று ஏறுமுகமாக இருந்தது. ஆனால் இதற்காக நாங்கள் கொட்டும் உழைப்பு மிகவும் அதிகம். இந்த உழைபிற்கெற்ற  வருமானம் இருக்கிறதா என்றால் அது தான் இல்லை. ஆனால்  இதற்காக உழைப்பது பிடித்து இருக்கிறது. மேலும் மேலும் இதற்காக உழைக்கவே ஆசை படுகிறோம். இந்த உழைப்பு என்றாவது ஒரு நாள் இதற்கான ஊதியம் ஈட்டும்  என்று நம்புகிறேன். அன்றாட வேலை தவிர நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்த எதாவது ஒன்றில் சொற்ப நேரம் சிலவிட வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். இது, பாட்டு, நடனம், ஓவியம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி நமக்கு பிடித்ததில் நாம் நேரம் சிலவிடுவது  மிகவும் அவசியம். 


நல்ல வேலை, முத்தாக மூன்று குழந்தைகள், அன்பான துணைவி, அரவணைக்கும் பெற்றோர் -  குறை ஒன்றும் இல்லை-மறை மூர்த்தி கண்ணா ! 2013ம் இப்படி இருக்கவே நான் விழைகிறேன்.  உங்களுக்கும் 2013 அருமையாக அமைய வாழ்த்துக்கள்.