புதன், 10 டிசம்பர், 2008

2008 - ஒரு டைரி குறிப்பு

2008 எப்படிங்க இருந்தது ? இந்த உலகத்தபொறுத்த வரை இது ஒரு மோசமான வருடம். மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இந்த உலகம் சந்தித்தது. "Recession" என்ற வாக்கியம் மிக பரவலாக பேசப்பட்டது. அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த "Recession" chain reaction போல உலகம் முழுதும் பத்தி கொண்டது. மிகப்பெரும் ஜாம்பவான்கள் எல்லாரும் மஞ்சா கடுதாசி கொடுத்தார்கள். கொத்து கொத்தாக மக்கள் வேலை இழந்தார்கள். 2nd world war அப்புறம் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெறுக்கடி இது என்று உலகம் ஒத்துக்கொண்டது. இதில் இருந்து மீண்டு வர 1 மாதம், 1 வருடம், 2 வருடம் ஆகும் என்று பலரும் பலவிதமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள். விலை வாசி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

2008 எப்படிங்க இருந்தது ? இந்தியாவை பொறுத்த வரையுலும் இது ஒரு மோசமான வருடம் தான். Recession பயம் இந்தியாவையும் பத்தி கொண்டது. 2007ல் சக்கை போடு போட்ட பங்கு வர்த்தகம் 2008ல் மட்டையாக படுத்துக்கொண்டது. அமெரிக்கா, ஐரோப்பா வை நம்பி இருக்கும் IT கம்பனிகள், call centre, BPO அனைவரையும் கவலை பற்றி கொண்டது. அப்ஹிநவ் ஒலிம்பிக் இல் தங்கம் சுட்டார். அரசாங்கம் அவருக்கு மூன்று கோடி ரூபாய் சன்மானம் தந்து கௌரவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மும்பை தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளானது.3 நாள்களுக்கும் மேலாக மும்பை தீவிரவாதிகள் வசம் இருந்தது. CNN மற்றும் BBC க்கு உலகில் வேறு news இல்லாதது போல் 24 மணி நேரமும் மும்பையை உலகிற்கு காட்டினார்கள். மும்பை வாசிகள் மெழுகு வர்த்தி ஏற்றினார்கள். சிலர் பஸ் மேல் கல் எறிந்து அரசாங்கம் மேல் தமக்கு இருக்கும் கோபத்தை வெளிபடுத்தினார்கள். அரசாங்கம் வழக்கம் போல் பாகிஸ்தான் மேல் பழி சுமத்தியது. தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு மடிந்த சிப்பாய்களுக்கு மூன்று லட்சம் கருணை தொகையை அறிவித்தது. ஒலிம்பிக்கில் தங்கம் சுட்டவருக்கு மூன்று கோடி, தீவிரவாதியை சுட்டு மடிந்தவருக்கு வெறும் மூன்று லக்ஷம் தானா என்ற கேள்வி எழுந்து அடங்கியது.

2008 எப்படிங்க இருந்தது ? தமிழ் நாட்டை பொறுத்த வரை இது இன்னும் ஒரு வருடம் அவ்வளவு தான். கருணாநிதிக்கு ஒரு வயது அதிகம் ஆனது. மின்வெட்டு காரணமாக சென்னை வியர்த்து வழிந்தது. வழக்கம் போல அண்ணா தி மு க சட்ட சபையில் வெளி நடப்பு செய்தார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி திட்டி கொண்டார்கள். ஐந்து டஜன் படங்கள் வெளி வந்து வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டது. விஜய், அஜித், சிம்பு, சொம்பு எல்லாரும் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி ஜல்லியடிதார்கள். ஆஸ்கார் ரவிச்சந்திரன் புண்ணியத்தில் கமல்ஹாசன்10 வேடங்களில் தசாவதாரத்தில் தோற்றம் அளித்து புகழை தேடி தேடி கொண்டார். படம் படுத்துக்கொண்டது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் கதி தெரிய வில்லை. விடுதலை புலிகளுக்கு ஆதரவாக நடிகர்கள் சாலையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசி சிலர் சிறைக்கு சென்றார்கள். உஸ்மான் சாலையில் கூட்டம் நெருக்கி தள்ளியது. போத்தீஸ், சென்னை சில்க்ஸ் என்று மூச்சு முட்ட ஷாப்பிங் பண்ணிவிட்டு சரவணா பவனில் சப்பு கொட்டினார்கள். எல்லாரும் அதிகமாக உணர்ச்சி வசபட்டர்கள், கொந்தளித்தார்கள். அளவுக்கு அதிகமாக புளிய் , காரம், உப்பு சேர்த்து முட்ட முட்ட சாப்பிட்டார்கள். மழை காலத்தில் சென்னை வாசிகள் படகில் சவாரி செய்தார்கள். டிசம்பர் சபா காண்டீனில் கூட்டம் வழிந்தது, இன்னும் ஏராளமான இளைஞகர்கள் சென்னை நோக்கி வேலை தேடி வந்தார்கள், சென்னை சென்கல்பட்டையும் தாண்டி விரிந்து கொண்டு இருக்கிறது. வடிவேல், விஜயகாந்த் சண்டையை தின தந்தி முக்கிய செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டு தமிழ் நாட்டுக்கு சொன்னது. எனது அருமை மதிபிற்குரிய எழுத்தாளர் சுஜாதா காலமானார். இளைஞர்கள் சொட்டை தலையுடன் 2nd ஷோ படம் பார்த்தார்கள். கோலங்கள் இந்த வருடமும் முடியவில்லை. மெகா சீரியலின் ஆதிக்கம் இந்த வருடமும் தொடர்ந்தது .

2008 எப்படிங்க இருந்தது ? என் மாமனாரை பொறுத்த வரை மிக மோசமான வருடம் இது. ரெண்டு பொண்ணுங்களும் foreign ல. 2007 வரை ஒரு பொண்ணு தான் foreign ல இருந்தா. தனிமை ஒரு பக்கம் வாட்ட வாடகை காரன் ரெண்டு கண்ணிலும் விரலை விட்டு ஆட்டிட்டான். இனிமேல் அவர் நான் போலீஸ் ஸ்டேஷன் வாச படிய கூட மிதிச்சது இல்லன்னு சொல்லிக்க முடியாது. ஏக்க சக்க செலவு வேறு . லஞ்சம் இன்றி ஓரணுவும் அசையாது என்பதை 2008 அவருக்கு புரிய வைத்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் திருட்டு. சுவாமி னு ஒன்னு இருக்கானு அவரையே கேள்வி கேக்க வச்ச மிக மோசமான வருடம் இது.

2008 எப்படிங்க இருந்தது? என்ன பொறுத்த வரையில் சூப்பர் வருடம் இதுங்கோ. பின்ன நானும் என் மனைவியும் சேர்ந்து இருக்கற பாக்கியம் 2008 la தான் கிடைச்சது. அதுவும் foreign countryla இருக்கிற opportunity. ஸ்ரேயா (என் மகள்) வளர்வதை பக்கத்துல இருந்து பாக்கற opportunity கிடைச்சது. கை நிறைய காசு புரண்டது. பாரிஸ், இத்தாலி னு டூர் போக முடிஞ்சது. annivessarykku Island போனோம்(anga poi vegitarian kidaikkama patni kidandadhu thani story). வெள்ளி கிழமையான பெப்சி officela இருந்து free சிப்ஸ் எடுத்துண்டு வர முடிஞ்சது. வாரம் ஒரு hollywood movie download பண்ணி பாக்க முடிஞ்சது. Tom Hanks ,Samuel Jakson என்று பல நடிகர்கள் பரிச்சியம் ஆனார்கள். கலர் கலரா போட்டோ எடுத்து orkutla போட்டுக்க முடிஞ்சது. உலகில் மிக பிரசித்தி பெற்ற தேவாலயங்களுக்கு எல்லாம் போயிட்டு வந்தோம். எவ்வளவு தான் சந்தோஷமா இருந்தாலும் தனிமை தெரிஞ்சது. உறவுகள் தூரமா இருக்கற வலி புரிஞ்சது. ஷேர் மார்கெட்ல நெறைய பணம் போனது. எங்க ரெண்டு பேருக்கும் அம்மை வந்து கழ்டபட்டோம். வாரா வாரம் ஆனந்த விகடன் படிக்க முடியாமல் போனது. இப்படி சில இழப்புகள் இருந்தாலும் 2008 எனக்கு சூப்பர் ங்கோ!. உங்களுக்கு எப்படி ?

லேபிள்கள்: ,

5 கருத்துகள்:

Blogger Sowmya கூறியது…

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

10 டிசம்பர், 2008 அன்று AM 3:14  
Blogger Sowmya கூறியது…

The blog is too good. Venkat my hubby has got lot of qualities. He is a good speaker(nalla kulla poduvar), good imagination skills, good lyrics writing skill with existing film songs tunes, fair voice(enga anna nalla paduvarakkum!!!) and working with photos. He is a good hubby and good dad too!! Jodi porutham vacha we will surely win!!! Endha karpanai thiran and ezhuthu thiran avar kitta neraya iruku. As he told this is the year that we live together continuously for 12 months in our marriage life of 3 years. Not sure how things are going to happen in the future. Whatever may be i pray to god to be with him always :-) (koodave irundha than control irukum!!!) and Shreya too wants to be with her dad. 2008 is good for me. But my Parents faced lots of obstables this year. Whatever they faced will be an experience for all of us to be caution in the future. We should be optimistic always and we should think that whatever is happening is always good for us and good and bad is part of life and we should face them and acheive victory!. I dedicate my love to my beloved hubby, my daghter shreya and my Parents and in-laws and to my sister and her family and to my spouse's siblings!!!

10 டிசம்பர், 2008 அன்று AM 3:15  
Blogger Vijayalakshmi கூறியது…

Padichom and enjoy panninom. very nice!!!!All the Best for both of you. We Pray god for the coming year also be like 2008 for both of you.

VL & TL

10 டிசம்பர், 2008 அன்று AM 8:00  
Blogger srini கூறியது…

orange post nalla irundhudhu, irundhalum amsterdamla neenga rendu perum pannathu pathiku mela moodi marachu poi solli ezhudhi irukelnu enga ellarukum theriyum..........

12 டிசம்பர், 2008 அன்று AM 11:17  
Blogger Balasubramaniam A.G. கூறியது…

Anne unga mamanaar romba paavamne. yaaravathu vanthu help pannunganne.

15 டிசம்பர், 2008 அன்று AM 1:12  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு