வியாழன், 11 டிசம்பர், 2008

ஆரஞ்சு


ஆரஞ்சு என்று சொன்னவுடன் உங்களுக்கு எதுங்க ஞாபகத்துக்கு வருது ? ஆரஞ்சு பழம் தானே ? ஒரு வருடத்துக்கு முன்னால் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இருந்தால் நானும் இதை தான் சொல்லி இருப்பேன். ஆனால் இப்பொழுது என்னுடைய பதில் நெதெர்லாந்து! இதற்கும் ஆரஞ்சு க்கும் என்ன சம்பதம்னு கேக்கறீங்களா ? நெதெர்லாந்து உடைய கலர் ஆரஞ்சுங்க

கிட்ட தட்ட கேரளா சைஸ் தான் இருக்கும் நெதெர்லாந்து. பொதுவாக இந்த நாட்டை ஹாலந்து என்று அழைக்கிறார்கள். இது தவறு. தெற்கு மற்றும் வடக்கு ஹாலந்து இங்கு உள்ள இரெண்டு மாகாணங்கள் அவ்வளவு தான். இதை வைத்து ஒட்டு மொத்தமாக நேதேர்லாந்தை ஹாலந்து என்று அழைப்பது பிழை. இங்கு மக்கள் பேசும் மொழி டச்சு. இங்கு வாழும் மக்களை டச்சு என்று அழைகிறார்கள். கேப்டன் விஜய காந்த் இந்த ஊரில் பிறந்து இருந்தால் "நான் வேணும்னா கூலி காரனா இருக்கலாம் ஆனால் நான் ஒரு டச்சு காரன்டா " என்று கண்ணு சிவக்க சிவக்க வசனம் பேசுவார்.

இங்கு பூக்கும் துலிப் மலர்கள், விண்ட்மில் , மர ஷூ, சீஸ் எல்லாம் ரொம்ப பிரபலம். இது எல்லாவற்றையும் விட எனக்கு இங்கு ரொம்ப பிடித்தது இங்கு வாழும் மக்கள். கேப்டன் பாணியில் சொல்லவேண்டுமானால் டச்சு காரர்கள். டச்சு காரர்கள் மிகவும் பொறுமை சாலிகள். ஒரு வேலையே கொடுத்துவிட்டு அதை முடித்து கொடுப்பதற்காக காத்திருக்கும் பொறுமை இவர்களிடம் இருக்கிறது. நடுரோட்டில் நீங்கள் நடந்து போனால் கூட காரின் வேகத்தை குறைத்து புன்சிரிப்புடன் உங்களை ஓரமாக செல்லும் படி கை காட்டும் பெருந்தன்மை அவர்களிடம் இருக்கிறது. உங்களை பார்க்கும் போது மலர்ந்த முகத்துடன் வணக்கம் சொல்லும் பாந்தம் இருக்கிறது. வீடுகளை மிக துப்புரவாக வைத்துக்கொள்ளும் நேர்த்தி இருக்கிறது. நள்ளிரவு நேரத்திலும் கூட சிக்னலில் சிகப்பு விளைக்கை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தும் பொறுப்புணர்ச்சி இருக்கிறது. இங்கு மிகவும் தடினமான பெண்களை பார்ப்பது அரிது. அனைவரும் சிக் என்று இருப்பார்கள். கத்தி பேசுவது, கோபம் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது என்று எதுவும் கிடையாது. இத்தகைய குணங்களுக்க்காகவே தாரளமாக நாம் சொல்லலாம் "அட்றா சக்கை அட்றா சக்கை".
இங்கு எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விழயம் சைக்கிள். இங்கு சைக்கிள் செல்வதற்காக தனி ரோடு போட்டு உள்ளார்கள். சைக்கிள் தான் இவர்களது பிராதன வாகனம். அறுபது வயது பாட்டி கூட சைக்கிள் மிதிக்கிறாள். இது இந்தியாவில் சாத்தியமா என்று தெரிய வில்லை. தனி ரோடு இருந்தால் கூட வேளச்சேரி முதல் அம்பத்தூர் வரை நாற்பது டிகிரீ வெயிலில் யாராவது சைக்கிள் மிதிப்பார்களா என்பது சந்தேகம் தான். அப்புறம் இங்குள்ள ரயில். என்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது இங்குள்ள ரயில்கள்.

Amsterdamil உள்ள சிகப்பு விளக்கு பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. சிகப்பு விளக்கு என்றவுடன் நீங்கள் மும்பை சிகப்பு விளக்கு பகுதியையோ அல்லது மகாநதி படத்தில் காண்பிக்கப்படும் கொல்கத்தா சிகப்பு விளக்கு பகுதியை போல் அழுக்காகவும் , அசிங்கமாகவும் ஏராளமான ப்ரோகேர்களுடனும் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இந்த சிகப்பு விளக்கு பகுதியை ஒரு மிக பெரிய சுற்றுலா தலமாக வளர்த்துள்ளர்கள். மிகவும் பாதுகாப்பான இடம். வீதியின் இரண்டு பக்கங்களிலும் கண்ணாடி கதவுக்கு பின்னால் நின்று பிகினியில் பெண்கள் உங்களை அழைபார்கள். கருப்பு, சிகப்பு, மாநிறம், சப்பை மூக்கு, குள்ளம், ஒயரம் என்று எல்லா விதங்களிலும் பெண்கள் இங்கு கிடைப்பார்கள். வீதியில் நடந்து கொண்டே இரண்டு பக்கங்களிலும் காத்திருக்கும் பெண்களை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒரு நடை போய் வரலாம். ஐம்பது euro க்கு உங்களால் ஈடுகொடுக்க முடிந்தால் சொர்கத்தை காட்டுவார்கள். முப்பது euro கொடுத்தால் லைவ் ஷோ பார்த்து வரலாம். செக்ஸ் சம்பத்தப்பட்ட அத்தனை கருவிகளையும் (!?) இங்கு கடை விரித்து பரப்பி இருப்பார்கள். நானும் என் மச்சானும் ஒரு முறை இங்கு ஒரு உலா 'சென்று' வந்தோம். நாக்கை தொங்க போட்டுக்கொண்டு ஜொள்ளு விட்டோமே தவிர பக்கத்தில் போய் ரேட் விசாரிக்க கூட தைரியம் போத வில்லை. நீங்கள் இந்த சமாச்சாரத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவரானால் ஒரு நடை இங்கு போய் வரலாம்.


அறுபது லக்ஷம் துலிப் மலர்களை நீங்கள் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா ?இங்கு மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் இங்கு பூக்கும் துலிப் மலர்கள் ரொம்ப அருமை. பல வண்ணங்களில் லக்ஷ கணக்கான துலிப் மலர்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்காகவே நீங்கள் இங்கு ஒரு முறை வந்து போகலாம்.
இந்த நாடு 350 வருடங்களுக்கு மேலாக ஒரு சுதந்திர நாடு. மக்கள் தொகை ரொம்ப குறைவு. இங்கு லஞ்சம், ஊழல் இல்லை. மேற் சொன்ன அறிய குணங்கள் இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது. இன்னொரு நாட்டை நம்பி பொழப்பை ஓட்ட வேண்டிய நிலைமை இவர்களுக்கு இல்லை. என்னுடைய மனைவிக்கு வேலை இல்லை என்பதால் இந்த அரசாங்கம் மாதம் 200 euro தருகிறது. மின் வெட்டு இல்லை. மின் வெட்டின் போது காதில் வந்து பாட்டு படும் கொசு இங்கில்லை. மிக சுத்தமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. குண்டும் குழியுமான சாலை இல்லை. திருட்டு பயம் இல்லை. வெயில் இல்லை. வியர்வை இல்லை. என் கக்கத்தருகில் வாசனை இல்லை.
ஐந்து வருடம் இங்கிருந்தால் கூப்பிட்டு டச்சு பாஸ்போர்ட் கொடுத்து விடுவார்களாம். என்ன ஒரு டச்சு பாஸ்போர்ட் வங்கிடலமா ? எனக்கும் என் பெண்ணுக்கும் ஆரஞ்சு நா ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு ?

லேபிள்கள்: ,

1 கருத்துகள்:

Blogger Balasubramaniam A.G. கூறியது…

Empa nee hospitalukku kashtta pattathu unnugaya kannadi odanchathukku evlo chelavunnu chethu ezhutha vendi thaane

15 டிசம்பர், 2008 அன்று AM 1:07  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு