செவ்வாய், 16 டிசம்பர், 2008

கடவுளை பற்றிய எனது நிலைப்பாடு

நிற்க!. இது முழுக்க முழுக்க என்னுடைய சிந்தனை , என்னுடைய நிலைப்பாடு, அவ்வளவு தான். கண்டிப்பாக நான் இங்கு நாத்திகம் பேச போவது இல்லை. இதன் மூலம் நான் மெத்த படித்தவன் என்று கட்டி கொள்ளவோ, அதிக பிரசங்கி என்று சொல்லி கொள்ளவோ விரும்ப வில்லை. இதன் மூலம் நான் என்னுடைய கொள்கைகளை யார் மேலும் திணிக்க விரும்பவில்லை. இதை படித்து விட்டு யாரும் தமது கொள்கைகளை விட்டுவிட வேண்டாம். எனக்குள் எழும் கேள்விகளை நான் இங்கு முன் வைக்கிறேன். இதையும் மீறி உங்களை, உங்களது நம்பிக்கைகளை இது புண் படுத்தும் என்று நீங்கள் கருதினால் மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கவும்.

கடவுள் என்பவர் யார் ? உலகம் முழுதும் ஏராளமான மதங்கள், ஏராளமான கடவுள்கள் இருக்கிறார்கள். முக்குக்கு முக்கு கோவில்கள் இருக்கின்றன. இது தவிர நாம் பல கடவுள் படங்களை சட்டத்தில் அடித்து frame செய்து மாட்டி தினமும் கும்புடுகிறோம், பூஜை செய்கிறோம். மனமுருகி வேண்டுகிறோம். இந்த பிரார்த்தனை பலித்தால் உனக்கு வெள்ளி கவசம் போடுகிறேன் என்று வியாபாரம் பேசுகிறோம். பக்கம் பக்கமாக சமஸ்க்ருத ஸ்லோகங்களை உறி அடித்து அதன் அர்த்தம் கூட புரியாமல் அதை சொல்லி /பாடி கொண்டே சமையல் பண்ணுகிறோம். சிலர் தீ மிதிக்கிறார்கள், வாயில் அலகு குத்தி கொள்கிறார்கள். கோவில்களில் மூன்று ரூபாய் அர்ச்சனை சீட்டு வங்கி குடும்பத்தில் உள்ள அத்தனை பேர் பேரிலும் அர்ச்சனை செய்கிறோம். உடம்பை வருத்திக்கொண்டு அங்க பிரதக்ஷணம் செய்கிறோம். இவ்வளவு சட்டம் பேசும் நானும் மந்த்ராலயத்தில் அடி நமஸ்காரம் செய்து இருக்கிறேன். எதற்காக நாம் இப்படி எல்லாம் செய்கிறோம்? உண்மையில் கடவுள் இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்து நமக்கு நல்லது செய்கிறாரா?. அப்படி செய்கிறார் என்றால் கோடி கணக்கான மனிதர்கள் பிரார்த்தனை செய்கிறார்களே, அவர்கள் எல்லாருக்கும் அவர்கள் கேட்டது கிடைக்கிறதா? நீங்கள் இது வரை மனமுறிகி வேண்டியது எல்லாம் நடந்து இருக்கிறதா? அப்படி நடந்து இருந்தால் இது எல்லாம் கடவுள் ஒருவனால் மட்டுமே நடந்தது என்று நம்புகின்றீர்களா? சந்தனம் , தேன், எண்ணை, நெய் , பஞ்சாமிர்தம் என்று கொட்டுகிறார்களே.. இதனால் அவர் மனம் குளிர்ந்து நமக்கு நல்லது செய்வாரா? பழனி ஆண்டி சிலையில் ஏதோ நவபாழனம் இருக்கிறது என்பதற்காக அங்க நோண்டி, இங்க நோண்டி பழனி ஆண்டி குண்டியை நோண்டினார்களே.. அவர்களை கடவுள் தண்டிக்கும் என்று நம்புகின்றீர்களா? ஒரு டஜன் சாமி படங்களுக்கு ஒரு tumler பாலை நெய்வேத்யம் பண்ணி அதையும் நாம் குடிக்கிறோமே ..அது எதற்காக..? உங்களுடைய பகுத்தறிவிற்கு இது எல்லாம் உண்மை என்று தோன்றுகிறதா..? என்னடா இவன் நாத்திகம் பேசமாட்டேன் என்று சொல்லி விட்டு நாத்திகம் பேசுகின்றான் என்று எண்ண வேண்டாம். இந்த கேள்விகள் எல்லாம் இதற்க்கு முன்பே பல நாத்திகர்கள் கேட்டு விட்டார்கள். இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்று முடிவுக்கு வந்து விடுவது சரியா ?

எனது கிராமத்தில் ஐயப்பன் பூஜையின் போது சிலருக்கு அருள் வந்து ஆடுவதை பார்த்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவர்களை கட்டு படுத்துவது மிகவும் கடினம். எனது தந்தைக்கு கூட ஒரு சில தடவை இந்த அருள் வந்து இருக்கிறது. எத்தனையோ இயேசு அழைக்கிறார் கூட்டங்களில் ஏராளமானோர் தன்வசம் இழந்து இருக்கிறார்கள். அவர்களிடம் இயேசு குடி கொண்டு இருக்கிறாரா? கண்டிப்பாக இல்லை. இதற்க்கு 'உணர்ச்சி வயபடுதல்' என்று சொல்லலாம். அயப்பன் பூஜையின் போது எல்லாரும் ஒன்றாக சரணம் கூப்பிடும் போது வேறு சிந்தனையே இல்லாமல் நாமும் அதில் மூழ்கி விடுகிறோம். அப்போது ஒருவர் உங்களுக்கு பின்னிருந்து சத்தமாக 'சாமியே ' என்று கூப்பிடும் போது நீங்கள் நிலை தடுமாறி தன் வசம இழந்து உங்கள் கட்டு பாட்டில் இல்லாமல் போகிறீர்கள்..இது தான் இயேசு அழைக்கிராரிலும் நடக்கிறது.. தியேட்டரில் மாரியம்மா பாட்டின் போதும் நடக்கிறது.

நீங்கள் ....
1. நமக்கு நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை பொறுத்தே இருக்கிறது என்று நம்புகின்றீர்களா?. நாம் மனதால் நல்லது நினைத்து நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா ?
2. நம்முடைய பழக்க வழக்கங்கள், உணவுமுறை, பாரம்பரியம் போன்றவற்றை பொறுத்தே நமக்கு நோய்கள் வருகின்றன, அதை மருந்து, மாத்திரை, மருத்துவரால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் ஒப்புகொள்கிறீர்களா?
3. நம்முடைய சாதுர்யம் போதன்மை, உழைப்பு, முயற்சி இல்லாமை, சோம்பேறித்தனம் தான் நம்முடைய கழ்டங்களுக்கு காரணம் என்பதை ஒப்புகொள்கிறீர்களா?
4. நாம் எடுக்கும் பல முடிவுகளை (நல்லதோ , கெட்டதோ) பொறுத்து நம்முடைய எதிர்காலம் இருக்கும் என்பது சரியா ?
5. எதிர்பாராமல் நடக்கும் விபத்து, இயற்கை சீற்றத்தினால் உண்டாகும் அழிவு போன்றவை எதுவும் நம்மமுடைய கட்டுபாட்டில் இல்லை என்பதையும் ஒப்புகொள்கிறீர்களா?

மேற்சொன்னவற்றை நாம் ஒத்துக்கொள்ளாது போகும் போது, நமக்கு கடவுள் துணை தேவை படுகிறது. ராகு காலத்தில் சென்றதினால் தான் இந்த காரியம் நடக்க வில்லை என்று நம்ப தோன்றுகிறது. மனிதனுக்கு ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும். மனிதனையும் மீறி அவனுடைய கட்டு பாட்டில் இல்லாமல் பல காரியங்கள் நடக்கின்றன. திடீரென்று நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நோய் வாய் படுகிறார்கள். சிலர் வேலை இழக்கிறார்கள்..இந்த எதிர் பாரத, அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாது சிலது நடக்கும் போது அவர்கள் மிகவும் ஆடி போய் விடுகிறார்கள். இத்தனை பெரிய இழப்பில் இருந்து எப்படி எழுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, அவர்கள் ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள். இந்த நம்பிக்கை தான் இங்கு கடவுள். நமக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்று அவர்கள் 'நம்பும்' போது ஒரு தைரியம் வருகிறது. கடவுள் சந்நிதானத்தில் போய் நின்று மனமுறிகி வேண்டி வெளி வரும் போது ஒரு தெளிவு அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த தெளிவுடன் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். நல்லது நடக்கும் போது இது என்னுடைய பிரார்த்தனையால் தான் நடந்தது என்று நம்புகிறார்கள். இல்லாத போது எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள். இந்த நம்பிக்கை மிகவும் தேவை. தன்னால் முயன்றது அத்தனையும் முயற்சித்து எதுவும் நடக்காமல் போகும் போது பாரத்தை கடவுள் மேல் இறக்கி வைக்கிறார்கள். மிகுந்த சோதனையில் இருக்கும் ஒருவனிடம் போய் நீ ஒரு நடை வேளங்கண்ணி சென்று பிரார்த்தனை செய்து வா பலிக்கும் என்றால் மிகுந்த நம்பிக்கையுடன் அவன் பிரார்த்தனைக்கு தயாராகிறான். இந்த நம்பிக்கை தான் ஒருவனை வாழ வைக்கிறது என்றால் கடவுள் இருக்கிறார் என்று நம்பி விட்டு தான் போவோமே.!

மிகப்பெரும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவன் தமக்கு அளித்து வரும் சிகிச்சைகளில் நம்பிக்கை இல்லாமல் தான் மிக சீக்கிரத்தில் இறந்து போக போவதாக நம்புகிறான். அவனுடைய பார்வையில் ஒரு money plant செடி தெரிகறது.அதில் வெறும் மூன்றே இலைகள் தான் இருக்கின்றன. அதுவும் தன்னை போல் நோய் முற்றி சாகும் தறுவாயில் உள்ளது என்று நம்புகிறான். அதில் உள்ள இலைகள் தான் தம்முடைய உயிர் என்றும்.. ஒவ்வொரு இலையாக விழ விழ தம்முடைய உயிரும் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று கற்பனை செய்து கொண்டான்.அடுத்த நாள் அந்த செடியில் உள்ள ஒரு இல்லை உதிர்ந்து விடுகிறது... இவனுடய உடல் நிலையும் மோசமானது.. அடுத்த நாள் இரண்டாவது இலை உதிர்ந்தது. இவனது உடல் நிலை மிக மோசமானது.. இன்னும் ஒரே ஒரு இலை தான் அந்த செடியில் இருந்தது..அது விழும் போது தம்முடய உயிர் போய் விடும் என்று மிகவும் நம்பினான். அடுத்த நாள் விழித்து பார்த்த போது அந்த இலை உதிர்ந்து விழாமல் இருந்தது..இவனுக்கு நம்பிக்கை வந்தது.. அடுத்த நாளுமிந்த இலை விழ வில்லை.. இவனுக்கு புத்துணர்ச்சி வந்தது.. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற தொடங்கியது .. அடுத்த ஒரு மாதத்தில் அந்த இலையும் விழ வில்லை, இவனும் முழுதுமாக குணமாகி விட்டான். உண்மையில் இவனுடைய நம்பிக்கையை அறிந்து கொண்ட டாக்டர், அந்த செடியில் ஒரு பிளாஸ்டிக் இலையை வைத்து அது விழாது போல் பார்த்துக்கொண்டார். மருந்திற்கும் மேலாக இவனுடைய நம்பிக்கை தான் இவனை காப்பாற்றியது.. இங்கு இவன் இலை மேல் வைத்த நம்பிக்கையை நம்மில் பலர் கடவுள் மேல் வைக்கிறோம். இந்த நம்பிக்கை ஒரு உயிரை காபற்றுமனால் அந்த நம்பிக்கையை நாம் எதில் மேல் வைத்தால் என்ன ?

ஒரு முறை அயப்பன் கோவில் செல்ல மாலை போட்ட எனது தந்தை கோவில் பயணத்திற்கு பணம் போத வில்லை என்று வருத்தப்பட்டார். அயப்பனை நம்பி மாலை போட்டு இருக்கிறேன், அவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பி அன்றாட வேலைகளில் இறங்கினார். எதிர்பாராமல் ஒரு வீட்டிற்கு wiring செய்யும் வேலை வந்தது. அந்த ஐயப்பன் தான் இந்த வேலையே கொடுத்து அதன் மூலம் கோவில் பயணத்திற்கு பணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று நம்பினார். இந்த நம்பிக்கை ஒருவருக்கு மிகவும் அவசியம். அவரிடம் சென்று கடவுள் மறுப்பு கொள்கையும் பகுத்தறிவும் பேச நான் விரும்ப வில்லை. அவரிடம் கடவுள் நம்பிக்கை பொய் என்று சொன்னால் உடனடியாக நான் வேறு ஏதாவது ஒன்றின் மேல் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியாக வேண்டும். அந்த வேறு ஒன்று எது என்று எனக்கு தெரியதா பட்சத்தில் நான் வாயை மூடிக் கொள்ளவே விரும்புகின்றேன்.

எல்லாம் சரி.Matterukku வருவோம். கடவுளை பற்றிய எனது நிலைப்பாடு என்ன?. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதனிடம் மிகவும் பற்று கொண்டவர். மெத்த படித்தவர். பகுத்தறிவு பேசிய பாரதியாரும் பராசக்தியை கொண்டாடினார். இன்னும் ஏராளமான சான்றோர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது என்னால் எப்படி கடவுள் இல்லை என்று சொல்ல முடியும்.? ஆனால் என்னுடைய கடவுள் நம்பிக்கை பகுத்தறிவுக்கு உட்பட்டது. கண்டிப்பாக உடல் நிலை சரி இல்லையென்று மசூதி முன் நின்று தொழுகை முடித்து வருபவரிடம் மூஞ்சியில் ஊத சொல்ல மாட்டேன். மூன்று ரூபாய் அர்ச்சனையில் எனது குடும்பத்து பாவம் முழுதும் தீர்ந்து போகும் என்று நம்ப மாட்டேன். ராகு காலத்தில் சென்றால் ஆபத்து என்று சொல்பவரிடம் அது உட்டாலக்கடி என்று சொல்லுவேன். உடல் வலிக்க பிரார்த்தனை செய்வது, பட்டினி கிடந்து கடவுளிடம் வேண்டுவது, கழ்டம் வரும் பொது கடவுளை திட்டுவது , உனக்கு தங்க அங்கி போடுகிறேன் என்று வேண்டி கொள்வது, லிட்டர் லிட்டராக சாமிக்கு அபிஷேகம் செய்வது, கடவுள் முன்பு கோழி, ஆடு, மாடு வெட்டுவது போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இரண்டாயிரம் ரூபாயை விசேஷ பூஜைக்கு கொடுப்பதற்கு பதிலாக ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு செலவிடுவேன். அன்பே சிவம், ஏழையின் சிரிப்பில் கடவுளை காணலாம் எனபதை உறுதியாக நம்புகின்றேன்.

கடவுளை பற்றிய எனது நிலைபாட்டை நான் தெளிவு படுத்தி விட்டேன். உங்களுடைய நிலைப்பாடு என்ன ? எல்லாரும் சேர்ந்து 2009 நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா ?

லேபிள்கள்: ,

6 கருத்துகள்:

Blogger srini கூறியது…

These are just my humble comments or my overview about spirituality. So pleae dont take it too hard.

enna porutha veraikum nambikai thanga vazkai. athu illama vazhkaila oru adi kooda eduthu veka mudiyathunga. namba life spanla arambathulerndhu partha, school porom, padikarom, nalla padicha nalla collegela edam kedaichu vazhkaila settle agalamnu oru nambikaiyoda padikarom. Apparam namba vazhkaila kalyanamgarathu nambikaiku kudukara periya recognition. munna pinna theriyatha oruthara eppadinga kalyanam pannika othukarom, appa amma namku nallathu than pannuvangannu nambikai la than othukarom. Even, take you as an example, after marriage, kudumba porupa ethunda apparam, velaya resign pannitu you went back to do you SAP course. Eppadinga confidenta ungalauku serum podhe theriyuma velai kedaikumnu, illa, neenga nambikaiyoda padichinga interview attend panninga settle aninga. enga ippadi vazhkaila persistenta iruka porathu kedayathunu irukara vishayathu mela ivalavu namikai vekara neenga, kadavula pathi mattum nambikai illama ippadi kelvi keka mudiyum.

Genetic biology, cell biology nu ethanai research pannalum kandipa ulagathoda arambatha kandu pidikarathu kashtam than. kadavul than ella uyirkalayum padaicharangaratha kandipa yaaralum falsenu prove panna mudiyathu. Oru cinema pattu iruku "nathikathai pesida nakku thanthathu yaaru" nu oru padal vari iruku? neenga nathigam pesalanu sonnalum kadavula pathi ippadi nambikai illama kelvi kekarathum nathigathula thanga varuthu. So unless you are able to prove that God is nowhere, it is a definite truth that God is everywhere.

thee midhikarathu, alagu kutharathunu madhiri kadumayana venduthalgal sami vandhu panna solrathu illa. athu manushangala avanga athma thriupthikaga pannikarathu. athayum nama kutham solla mudiyathu, athu avangaloda nambikai.

paal vechu neivedhyam panratha pathi solli irukeenga, enga- pala neivedhyam pannitu atha nambale eduthu kudichalum thappunu solreenga, pillayar paal kudikararnu avaruku paal kondu vitalum kuthamnu solreenga. ungala madhiri nambikari illatha alungaluku ellame kuthama thanga theriyum. ana ethu sari ethu thavarunu pirichu pakarathuku thanga "KADAVUL" namaku aaru arivai kuduthu irukar.

I am a strong believer of Gita. ellarume oru life messageoda thanga boomiku varom. vandha velai mudincha than thirumbi poga mudiyum. kandipa avangaavanga karmavoda palana ellarum kandipa anubavipanganu gitaila solli riukaratha naan nambarenga. athanala thappu panravangaluku kandipa thandanai kedaikumnu naan nambarenga.

ippo daily sapta than uyir vazha mudiyum, athuku neenga daily vidham vidhama panni sapidanumnu illaye, etho vayathuku sapidanum, ana appadiyanga sapidarom, ethanai vidham vidhama dishes panni sapidarom, ithunundu naakuku kudukara importance a daily nambala padacha "KADAVULUKAGA" slogam sollrathuku selavu pannina ennanga thappu?

16 டிசம்பர், 2008 அன்று 8:05 AM  
Blogger srini கூறியது…

romba romba sorry, naan last two paragraphs padikarathuku minnadiye en comments ezhuthiten.

unga blog nalla iruku, kadasila solli irukara point, kasa kondu vera engayathu kudukarathuku badhila oru poor kozhandhaiku kudupennu, super o super point. athai naan migavum vara verkiran.

16 டிசம்பர், 2008 அன்று 10:06 AM  
Blogger Balasubramaniam A.G. கூறியது…

I think what Mr. Srini's first comment is right. I also feel for you if Sujatha says there is god then you also say there is god and viceversa.

19 டிசம்பர், 2008 அன்று 11:56 PM  
Blogger Sowmya கூறியது…

(comments from Viji lakshmanan, my mother)
1. Enga type pannapora ella vizhayangalum ennoda own opinion. veedu sale panra vizhayathuku varuvom veettu problemku office staff kitta ponom apparm police kitta ponom ac kitta ponom oonum nadakala ennoda pillayar kitta nov 30th annikulla enaku decision therinji aganumnu condition potten. adhemadhiri nov 30th vangara party vandu nallavidhama pesi advance kuduthutu poita.
apparam nallabadiya registration mudinjudhu edhellam ennoda pillayaraladhan nadandudu appadingaradula martru karauthuke edamilla
aduku swamiku thanks solradudhane mudai andha thankska velipaduthathan abhishegam, special pooja, velli kavacham etc. etc. seiyaren. endha
thanksyaye human beings kuda celecrate panradhana hotel poi saptutu varuvom sami vandu sapiduvara adukakadhan endha poojaikal.
2. slogam solradh slogam solradhu eppadi sweet each person saptadhan andha tastea
unara mudiyum andha madhiridhan slogam solrabodu kidaikara santhoshamum. adha solli puriya vaika mudiyadhu avavala anubavichadhan
adha unara mudiyum.
3. namaku yaravadhu samayathuku help panna namba adha marakkama ghabagam vachindu samayam varumbodhu avaluku nambalala mudinja help panrom.
nambala koon kurudu sevidu ellama namaku nalla kowledge kuduthu nalla statusla vachu irukkaraswamiku Rs.2000 or 4000 selavu
panni en pooja panna kudadhu.

L.Viji

23 டிசம்பர், 2008 அன்று 8:14 AM  
Blogger palani கூறியது…

Hi venkat, you are truly reflecting my thoughts. Please keep blogging

25 டிசம்பர், 2009 அன்று 8:17 AM  
Blogger basu கூறியது…

நமது உடல் மட்டுமல்ல. அறிவும்
வரையறைக்கு உட்பட்டதுதான்.
அந்த வளயத்தில் வராததை ,நமது
முன்னோர்கள் சொன்னதை நம்பினால்
ஆனந்தம் உண்டு.

இல்லாவிட்டால் மரணம் வரை தேடல்தான்.

1 மார்ச், 2010 அன்று 9:59 AM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு