வெள்ளி, 21 மே, 2010

ஆஸ்பத்திரி அவஸ்தை!

மூட்டு வலியினால் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொண்டும் சில மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டும் இருந்த எனது தந்தையை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று சென்னையிலயே மூட்டு சிகிச்சைக்கு பெயர் பெற்ற MIOT மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். எழுபது வயதை கடந்த Dr மோகன்தாஸ் தான் மூட்டு சம்பந்தமான அத்தனை நோயாளிகளையும் பார்க்கிறார். இவர் தான் MIOT மருத்துவனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கூட. ஐந்து நிமிடிங்களில் ஐந்து நோயாளிகளை பார்க்கிறார். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு Dr பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மூட்டை மடக்கி பார்த்து விட்டு இது ஆர்த்ரசிஸ் என்றும், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி பண்ணி விடலாம் என்றும், காலை வந்தால் அன்றே அறுவை சிகிச்சை செய்ய பட்டு அன்று இரவே நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டு அடுத்த நோயாளியை பார்க்க சென்று விட்டார். எங்களால் அடுத்த கேள்வியை கூட கேட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் இன்னொரு அம்மணி வந்து ஒரு மூட்டுக்கு Rs 25 ,000 ஆகும் என்றும் இரண்டு மூட்டையும் ஒரே நேரத்தில் பண்ணி விடுவது நல்லது என்றும் பண்ணாது போனால் நாளடைவில் முழு மூட்டும் பாதிப்பு அடைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரிடும் என்றும் சொன்னார். வீடிற்கு வந்து சிலரிடம் கலந்து ஆலோசித்ததில் அறுவை சிகிச்சை தான் இதற்க்கு நிரந்தர தீர்வு என்று முடிவானது. எனது தந்தையும் இரண்டு மருதுவர்களிக்டம் சென்று மாற்று கருத்து கேட்டதில் அவர்களும் அறுவை சிகிச்சையை தான் பரிந்துஉரைத்தார்கள். ஆகவே ஒரு நல்ல நாளில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அட்மிட் ஆவது என்று முடிவனாது.

திட்டமிட்ட நாளில் காலை 7 .30 க்கு மருத்துவனை சென்றோம். இங்கிருந்து ஆரம்பமாகிறது அவஸ்தை. தற்பொழுது அறை எதுவும் காலியாக இல்லை என்றும் 8 மணிக்கு மேல் அறை நிலையை பார்த்து அறையை எங்களுக்கு கொடுப்பதாகவும் சொன்னார்கள். எனது தந்தையை எதுவும் சாப்பிடாமல் வர சொல்லி இருந்தார்கள். 8 மணி என்பது 9 மணி ஆகியும் எங்களுக்கு நிலைமை தெரிய வில்லை. எனது அப்பா வேறு புலம்ப ஆரபித்து விட்டார். போய் சத்தம் போட்டதில் non-ac ரூம் தான இருக்கிறது என்று ஒரு ரூமை கொடுத்தார்கள். நாங்கள் ரூமிற்கு சென்ற போது தான் தெரிகிறது அது நான்கு பேர் சேர்ந்து இருக்கும் ஒரு ரூம் என்று. மூத்திரம் நிறைந்த மூத்திர குடுவை வேறு ஒரு கட்டிலின் கீழ். அதை எடுக்க ஆள் யாரும் இல்லை. எனது தந்தை ஏறக்குறைய திரும்ப வீடிற்கு கிளம்ப ரெடி ஆகி விட்டார். நான் திரும்ப சென்று சண்டை போட்டதில் இந்த ரூம் மட்டும் தான் இருக்கிறது என்றும் விருப்பமில்லயனில் எங்களை இன்னொரு நாள் வருமாறும் மிகவும் எளிதாக சொன்னாள். வேறு வழி இன்றி நாங்கள் அந்த அறையில் இருந்தோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவரும் வந்து பார்க்க வில்லை. போய் பார்த்ததில் ஒரே ஒரு nurse தான் எல்லா ரூமிற்கும் ஓடி கொண்டு இருக்கிறாள். கேட்டால் ஆள் பற்றாகுறையாம். மணி 11 தாண்டி விட்டது. பட்டினியின் காரணத்தால் அப்பா கோவத்தில் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். எப்பொழுது அறுவை சிகிச்சை, யார் மருத்துவர் என்ற எந்த தகவலும் இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு nurse வந்து ரத்தம் எடுத்து சென்றாள். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஒரு குத்து- கொஞ்சம் ரத்தம், கேட்டால் சென்ற முறை எடுத்த ரத்தம் பரிசோதனைக்கு பத்தாது என்கிறாள். X-ray catridge இல்லையென்பதால் x-ray வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ECG எடுத்து, Doctor இல்லாததால் Doctor opinion வேண்டாம் என்று விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த BP machine வேலை செய்யவில்லை. ஏதோ குத்து மதிப்பாக ரீடிங் எடுத்தார்கள். இது எல்லாம் தேவை இல்லை என்றால் எதற்காக இந்த test எடுக்க சொல்லுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை . அவர்கள் கொடுத்த கவுனில் ரத்தக் கறை, ஆங்கங்கே கிழிசல்கள். அப்பா கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டார். லட்சகணக்கில் பணம் செலவு செய்து தானே வருகிறோம்... அரசு மருத்துவமனையை விட மோசமாக இருக்கிறது இங்கே. ஒரு வழியாக அறுவை சிகிச்சைக்காக மதியம் 1 மணிக்கு அழைத்து சென்றார்கள். ஆபரேஷன் முடிந்து post operative வார்ட்க்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆபரேஷன் முடிந்து அன்றே நடந்து செல்லலாம் என்று சொன்னார்களே என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை. அடுத்த நாள் காலை ரூம்க்கு மாற்றிவிடுவார்கள் என்று சொனார்கள், எங்களை வீடிற்கு அனுப்பி விட்டார்கள்.

அடுத்த நாள் காலை சென்று கேட்டதில் ரூம் இல்லாததால் இன்னும் post operative வார்ட்லையே வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது .. என்ன கொடுமை சரவணா ..? நானும் அங்கும் இங்கும் அலைந்தும் ஒரு ப்ரோயஜனமும் கிட்ட வில்லை. ஒரு வழியாக மதியம் 12 மணி அளவில் ரூம்க்கு மாற்றினார்கள். இதுவும் shared ரூம் தான். ஆபரேஷன் பண்ணியதில் இருந்து இது வரை எந்த doctor வந்து பார்க்க வில்லை. Doctor ரௌண்ட்ஸ் எதுவும் இங்கு கிடையாதா ? Doctors வர வேண்டாம், ஆனால் nurses வரலாம் இல்லியா .. அதுவும் கிடையாது. சாயங்காலம் 4 மணி அளவில் ஆபரேஷன் பண்ணின doctor வந்து பார்த்தார். இவர் நன்றாக பேசினார். என்ன operation, எப்படி பண்ணினார் என்பதை விளக்கினார். Physiotherpist ஏன் வந்து பார்க்க வில்லை என்று பக்கத்தில் இருந்த நர்சை கேட்டார் .. physiotherapist லீவ் என்று பதில் வந்தது . இவ்வளவு பெரிய மருத்துவமனயில் ஒரு physiotherapist தான் என்பதை நம்ப முடியவில்லை. Doctor அவரை அடுத்த நாள் discharge பண்ணுவதாக சொன்னார். வேறு வழி இல்லாமல் அடுத்த நாளுக்காக காத்து இருந்தோம். ஒரு வழியாக அடுத்த நாள் பில்லிங் department உடன் போராடி discharge ஆகி தெறித்து ஓடி வந்து விட்டோம். அடுத்த முறை MIOT செல்லும் முன் யோசியுங்கள். Dr. மோகன்தாஸ் எல்லோருக்கும் ஆபரேஷன் தான் தீர்வு என்று சொல்லி எல்லோரையும் ஆபரேஷன்க்கு அனுப்புகிறார். ஒரு வேலை அது தான் அதற்க்கு நிரந்தர தீர்வாகவும் இருக்கலாம் . ஆனால் உங்களை கவனிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்னும் ரெடியாக இல்லை. என்ன தான் நல்ல மருத்துவர்கள் இங்கு இருந்தாலும் நல்ல பெட் கவர், தலையணை உறை கூட இங்கு இல்லாதது பரிதாபம். ஒரு வேளை எல்லா ஆஸ்பத்திரியுலும் இதே கதி தான என்று தெரிய வில்லை.

முடிந்த வரைக்கும் ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். தவிர்க்க இயல வில்லை என்றால் எத்தனை சீக்கிரம் எஸ்கேப் ஆக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வற முயற்சி செயுங்கள். எதாவது முன் எச்சரிக்கையாக டெஸ்ட் எடுக்கலாம் என்று யாராவது சொன்னால் வேண்டாம் என்று சொல்லி பாருங்கள். கேட்க வில்லையெனில் அலறவும் , தரையில் குப்புற படுத்து அழவும், இல்லை என்றால் மாட்டினீர்கள். சுஜாதா ஒரு கட்டுரையில் சொன்னது போல , ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மன சோர்வு அளிக்கும் இடம். எல்லாரும் ஆரோக்யமாக நம்மை சுற்றி இருக்கும் போது நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்து இருக்க, கண்டவர் கண்ட நேரத்தில் வந்து கண்ட இடத்தில ஊசி கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து , ஷகிலா ரேஞ்ச்க்கு உடம்பெல்லாம் தெரியும் படி நீல /பச்சை கவுன் அணிவித்து (MIOT என்றால் அதில் கொஞ்சம் கிழிசல்கள் /ரத்த கறை இருக்கலாம்) .. நம்மை பாடா பாடு எடுத்து விடுவார்கள்.

MIOT மருத்துவமனையில் என்னுடைய அனுபவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும் / எல்லா காலத்திலும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. !.