ஆடாத ஆட்டமெல்லாம் ...
எனது சிறு வயது முதேலே நான் மைக்கல் ஜாக்சன் என்ற பெயரை கேள்வி பட்டு இருந்து இருக்கிறேன். எப்படி எனக்கு இந்த பெயர் பரிச்சயமானது என்று ஞயாபகம் இல்லை. எனக்கு மட்டும் அல்ல.. உங்களில் பலருக்கும் மைக்கல் ஜக்க்சனை பற்றிய பரிச்சியம் உங்களை அறியாமலேயே ஏற்பட்டு இருக்கலாம். நம்மவர்கள் யாராவது நடனமாடுவதை பார்த்தால், "ஆமாம்...பெரிய மைக்கல் ஜாக்சன்ன்னு நினைப்பு மனசுல.. ஆடரத பாரு.. " என்று நக்கல் செய்வதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். நடனம்.. அதுவும் மேற்கத்திய நடனம் என்றால் அது மைக்கல் ஜாக்சன் தான் என்ற பெயர் நிலைத்து விட்டது. நம்மூர் முனியம்மாவுக்கு கூட மைக்கல் ஜாக்சன் பற்றி தெரிந்து இருக்கிறது என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது தானே.
ஒரு ஏழ்மை குடும்பத்தில் ஏழாவது குழந்தயாக பிறந்தார் ஜாக்சன். சிறுவயதில் தனது தந்தையால் மிகவும் கொடுமை படுத்தப்பட்டு இருக்கிறார். பின்னாளில் இதை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லும் போது பெரிதாக அழுது இருக்கிறார். அவரது சகோதரர்களுடன் ஜாக்சன்5 என்ற குழு அமைத்து தனது ஏழு வயது முதேலே ஆடி பாட ஆரம்பித்து விட்டார். 1982 இல் இவருடைய "த்ரில்லேர்" என்ற ஆல்பெம் இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனுடைய ஆல்பம் விற்பனை இன்றளவும் ஒரு உலக சாதனையாக இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் மக்கள் ஜாக்சன் காசட்டுகளை ஒரு பொழுது போக்கு சாதனமாக சாதனமாக வாங்குவதை விட்டு, ஒரு வீட்டு உபயோக சாதனமாக வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு என்று இருந்தால் அதில் சில ஜாக்சன் காசெட்டுகள் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டது. அடுத்தடுத்த இவரது ஆல்பம் அதனையும் மிக பெரிய ஹிட். இன்றளவும் மிக அதிகமாக ஆல்பம் விற்பனையில் ராயல்டி வாங்கியது இவர் தானம்.
துள்ள வைக்கும் பாப் இசையுடன் இவரது கடினமான அங்க அசைவுகளுடன் கூடிய நடனம் தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இவரது மூன் வாக் மற்றும் ரோபோட் நடனம் மிகவும் உலக பிரசித்தி. பல கின்னஸ் சாதனைகள், 13கிராமி விருதுகள், என்று பல விருதுகள் இவரை தேடி வந்தன. இவரது ஆல்பம் விற்பனை மட்டும் 750 மில்லியன்.
இப்படி ஒரு பக்கம் அவரது சாதனைகள் ஒரு பக்கம் குவிந்தாலும் மறு பக்கம் அவரது திட்டமிட படாத ஆடம்பரம் இவரை மிகபெரும் கடனாளியாகவே வைத்திருந்தது. ஊடகங்கள் இவரை துரத்தி கொண்டே இருந்தன. இவரது ஒவ்வரு செயல்களுக்கும் ஊடகங்களால் ஒரு கதை பின்ன பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இவருக்கு ஒரு வகையான தோல் சம்பத்தப்பட்ட வியாதியின் காரணமாகவே அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார். அனால் இந்த மீடியாக்கள் இதற்க்கு பலவிதமான காரணங்களை உலகத்திற்கு சொன்னது. மீடியா இவரை ஒரு பக்கம் துரத்தினாலும், மறுபக்கம் இவரே துரத்தி துரத்தி சென்று பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டார். பதிமூன்று வயது சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மிகப்பெரும் தொகையை ($22 மில்லியன்) அந்த சிறுவனின் குடும்பத்துக்கும் கொடுத்து நீதி மன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்தார். இது போல் பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். யானை மனிதனின் (!?) எலும்பை உடன் வைத்து இருந்தது, வயதை குறைப்பதற்க்காக ஏதோ ஒரு சேம்பரில் படுத்துக்கொண்டு இருந்தது, குரங்கு வளர்த்தது, என்று பற்பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். இவற்றில் பலவற்றை அவர் மறுத்தாலும் ஏதோ நெருப்பு இல்லாமல் புகை வருமா ? ஆனாலும் மீடியாக்கள் இவரை படாது பாடு படுத்தின. ஜாக்சன் மிகவும் நொந்து போய் ........
"Why not just tell people I'm an alien from Mars. Tell them I eat live chickens and do a voodoo dance at midnight. They'll believe anything you say, because you're a reporter. But if I, Michael Jackson, were to say, "I'm an alien from Mars and I eat live chickens and do a voodoo dance at midnight," people would say, "Oh, man, that Michael Jackson is nuts. He's cracked up. You can't believe a damn word that comes out of his mouth."—Michael Jackson
ஒரு பக்கம் இவர் சர்ச்சைகளிலும், ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்தாலும் இவர் பல்வேறு சேவை மையங்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். கிட்டத்தட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட சேவை மையங்களுக்கு பல மில்லியன் டாலர்களை நன்கொடை தந்து இருப்பது இவரது சேவை மனப்பான்மையை காட்டுகிறது.
பல உடல் உபாதைகள், பிளாஸ்டிக் சர்ஜெரி மூலம் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டது, 1993 இல் சிறுவனிடம் பாலியல் பலாத்காரம்- அதற்கான நழ்ட ஈடு, இரண்டு திருமணங்கள் - மூன்று குழந்தைகள், மீண்டும் 2005 இல் பாலியல் பலாத்கார புகார்கள் , ஏகப்பட்ட கடன் நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து அவரை ஒரு நல்ல நாளாக பார்த்து உலகத்தை விட்டு அனுப்பி வைத்தது. அவர் இறக்கும் போது மிகப்பெரும் கடனாளியாக ஒரு வாடகை வீட்டில் தான் இறந்தார்.
உலகில் வெகு சிலரே ஒரு கலையை உலகத்திடம் கொண்டு போய் சேற்ற பெருமைக்கு உள்ளானவர்கள். ப்ரூஸ் லீ எப்படி கராத்தே, குன் பூ போன்ற கலைகளை உலகம் முழுதும் பரிச்சிய படுத்தினாரோ அதே போல் பாப் இசையை உலகம் முழுதும் கொண்டு சென்று சேற்ற பெருமை மைக்கல் ஜாக்சனை தான் சேரும். எப்படி உலகம் சார்லி சாப்ளின், ப்ரூஸ் லீ போன்றவர்களை மறக்கதோ அதே போல் உலகம் மைக்கல் ஜக்கனையும் மறக்காது.
மைக்கல் ஜாக்சன் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களையும், மிக மோசமான தருணங்களையும் ஒரு சேர அனுபவித்தார் என்றே தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?
1 கருத்துகள்:
Super article! I am big fan of MJ(his dance and music)...True that he went thru lot of controversies.One of his friends recently gave an interview that MJ is one of the most disturbed souls in the world; he was scared and hid himself from media.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு