சனி, 24 டிசம்பர், 2011

கண் வலி

அன்று எப்பொழுதும் போல் விடியவில்லை எனக்கு. இடது கண் இமைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு பிரியாமல் இருந்தது. கொஞ்சம் கண்களை கசக்கி கண்களை திறந்தேன். கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. என்னடா இது நேற்று தூங்கும் போது நன்றாக தானே இருந்தது என்று நினைத்து கொண்டே கண்ணாடியில் கண்களை பார்த்தேன். இடது கண் முழுதும் சிகப்பாக இருந்தது. விஜயகாந்த் “தமிழன்டா ” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லும்போது அவருடைய கண்கள் எப்படி இருக்குமோ அப்படி அவ்வளவு சிகப்பாக இருந்தது எனது இடது கண் . இந்த சமயம் நான் அலுவல் காரணமாக புனாவில் இருந்தேன். உடனடியாக doctor யாரையும் சென்று பார்க்க முடியவில்லை . அருகில் இருந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில் சென்று காண்பித்து ஒரு drops வாங்கி போட்டு கொண்டு , அலுவலகம் சென்றுவிட்டேன் . உடன் வேலை செய்பவர்கள், ‘Venkat, what happend to your eyes.. is it contagious..?’ என்று கேட்டு பதிலுக்கு காத்திராமல் இரண்டு அடி தள்ளி நின்றார்கள். அடுத்த இரண்டு நாட்களில் கண்கள் சிகப்பு இன்னும் அதிகம் ஆனது. கண்ணின் கீழ் லேசாக வீக்கம் கட்டி கொண்டது. கண் ஓரத்தில் அடிக்கடி மஞ்சள் அழுக்கு சேர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் சென்னை வந்து விட்டேன் . ஏற்போர்டில் என்னை pickup செய்ய வந்த cab driver, என்ன சார் , ‘Madras eyea ‘ என்று தரையை பார்த்துக்கொண்டே கேட்டார். ‘இல்லை , இது புனே eye’ என்று பதில் சொன்னேன் . இதை Facebooklum status அப்டேட் செய்தேன்.

வீட்டிலும் இது ‘madras eye’ என்று முடிவு கட்டி விட்டார்கள். குழந்தை அருகில் வருவதை தவிர்த்தேன். அடிக்கடி கை அலம்பி கொண்டேன். சென்னை வந்த அன்றே என் வீடிற்கு அருகில் இருக்கும் (வேளச்சேரி) அகர்வால் கண் மருத்துவமனைக்கு சென்றேன். அகர்வால் மிகவும் புகழ் பெற்ற கண் மருத்துவமனை என்பது குறிப்பிட தக்கது. அந்த டாக்டருக்கு ஒரு 35 வயது இருக்கும் . எனது இரண்டு கண்களையும் லென்சில் வைத்து ஆராய்ந்து விட்டு , இது ‘Viral Contagios’ (வைரஸ் தொற்று நோய்) என்று சொல்லி இரண்டு சொட்டு மருந்துகள் கொடுத்தார். ஒன்று TOBA-F எனப்படும் ஒரு மருந்து. இதை மணிக்கு ஒரு தரம் இரண்டு சொட்டுகள் விட சொன்னார்.

அடுத்த இரண்டு நாட்களில் இடது கண்ணில் இருந்த சிகப்பு ஓரளவு குறைந்தது, ஆனால் அடுத்த கண்ணில் சிகப்பு தெரிய ஆரம்பித்தது. இது என்னடா வம்பா போச்சு .. இந்த கண்ணுல உள்ள சிகப்பு அடுத்த கண்ணுக்குக்கு போய் விட்டதா என்று நினைத்து கொண்டே , அதே TOBA-F மருந்தை இரண்டு கண்களிலும் விட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். இந்த கண்களோடு ஒரு நாள் விடாமல் அலுவுலகம் வேறு சென்றேன். அலுவலகத்தில் என்னை பார்த்து எல்லாரும் தெறித்து ஓடினார்கள். வழக்கம் போல், தரையை பார்த்துகொண்டு, கொஞ்சம் தூரத்தில் இருந்தே சிலர் பேசினார்கள். ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும்படி சிலர் அறிவுரை சொன்னார்கள்.

நான் 2 பாட்டில் TOBA-F காலி செய்து விட்டேன். இன்னும் கண் எரிச்சல், சிகப்பு, குறைந்த பாடு இல்லை. காலை கண் இமைகள் ஒட்டிக்கொண்டு திறக்க முடியாமல் இருக்கும். தண்ணீரில் கண்களை ஊறவைத்து திறக்க வேண்டி இருந்தது. மீண்டும் அகர்வால் (இரண்டாவது முறை) சென்று அந்த டாக்டரிடம் காண்பித்தேன். ‘சார், இது வைரல் infection. இதுக்கு TOBA-F தவிர வேற எந்த மருந்தும் கிடையாது. Based on your body immunity, உங்களுக்கு இது தானாகவே சரி ஆயிடும். நீங்க TOBA-F continue பண்ணுங்க. You will be alright’ என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்.

வேறு வழி இல்லாமல் நான் இன்னொரு TOBA-F வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தேன். அடுத்த நாள் எனது தம்பியின் (cousin) கல்யாணத்திற்கு கரூர் சென்றேன். எவரும் குழந்தைகளை என் அருகில் வர அனுமதிக்க தயங்கினார்கள். ஆனால் யாரும் இந்த கண்வலியோட இவன் ஏன் இங்க வந்தான் என்று என்னிடம் கேட்க வில்லை, ஆனால் கண்டிப்பாக ஒருவராவது நினைத்து கொண்டு இருப்பார்கள். நான் கல்யாணம் அட்டென்ட் பண்ணும் இந்த நாளோடு எனக்கு கண்வலி வந்து 2 வாரம் முழுதாக முடிந்து விட்டது. எனது வீட்டில் யாருக்கும் இந்த கண்வலி வரவில்லை. அதனால் இது தொற்று வியாதி (madras eye) இல்லை என்று எனக்கு தோன்றியது. அனால் இதை சொல்லி மற்றவர்களை convince பண்ண எனக்கு விருப்பமில்லை.

4 பாட்டில் TOBA-F தீர்த்து விட்டேன். இப்பொழுது இந்த சொட்டு மருந்து போடும் போது கண்கள் ஓரத்தில் ஒரு எரிச்சல் வேறு வந்தது. திரும்ப அகர்வால் சென்று அதே டாக்டரை பார்த்தேன் . ‘சார் , இதோட 3 weeks முடிந்து விட்டது. எனக்கு இன்னும் இந்த கண் வலி குறையவே இல்லை . அதுக்கு மேல இப்போ இந்த கண் எரிச்சல் வேறு.. வேறு எதாவது treatmet பண்ண வேண்டுமா?’ என்று கேட்டேன். அவரோ கூலாக ‘ நான் முன்னமே சொன்ன மாதிரி இது வைரல் infection, இதுக்கு மருந்து கிடையாது. எல்லாருக்கும் இது 1 வாரத்தில் சரி ஆயிடும், உங்களுக்கு கொஞ்சம் கூடுதலா ஆகறது. You will be alright.. நீங்க TOBA-F continue பண்ணுங்க .. வேற மருந்தே இதற்க்கு கிடையாது. உங்களுக்கு கொஞ்சம் immunity கம்மி போல ’ என்று சொன்னார்.

மேலும் இரண்டு TOBA-F பாட்டில் காலி செய்தேன். ஆனால் எனக்கு கண் வலி அதிகம் ஆனதே தவிர குறைந்த பாடில்லை. காலை கண்கள், ரத்த சிவப்பாக இருக்கும். இதற்கும் மேலும் பொறுக்காமல், எங்களுடைய குடும்ப டாக்டரிடம் காண்பித்தேன். அவர் அடையாரில் இருக்கும் வேறு ஒரு கண் மருத்துவரை பரிந்துரை செய்தார். அவரை போய் பார்த்தேன்.

இவருடைய கிளினிக் உள்ளே ஒரு தெய்வீக மணம் கமிழ்ந்தது. சுவர் முழுக்க சுவாமி போஸ்டர்ஸ்/படங்கள். கர்மா என்றல் என்ன என்று ஒரு விளக்க போஸ்டர் வேறு.. மெல்லிதாக வீணை இசை ஒலித்தது. ஒரே ஆன்மீக மயமாக இருந்தது. இந்த டாக்டர்க்கு ஒரு 45 வயது இருக்கலாம். பக்தி பழமாக இருந்தார். நோயாளிகளை அவரே வந்து அவருடைய ரூமிற்கு அழைத்து செல்கிறார் .. மீண்டும் சிரித்த முகத்துடன் வந்து வழி அனுப்பிகிறார். நிரம்ப சிரித்து பேசுகிறார். அவர் என்னுடைய கண்களை பார்த்து விட்டு.. இது வைரல் infectione இல்லை என்றார். “TOBA-F is nothing but a soframycin.. அதை போடறதுனால் எந்த ப்ரோயஜனமும் இல்லை. “ என்று சொல்லிவிட்டு எனது கண்களை சுத்தம் செய்தார்.. இரண்டு மூன்று மருந்துகளை கண்களில் விட்டு துடைத்து விட்டார் . கண்ணாடியை காண்பித்தார்.. என்னால் நம்பவே முடிய வில்லை . கண்களில் சிகப்பு இருந்த அடையாளமே இல்லாமல் உஜாலா கண்ணாக மாறி விட்டது. “TOBA-F தூக்கி குப்பைல போடுங்கோ. நான் வேற ரெண்டு drops எழுதி தரேன்.. இன்னும் ஒரு வாரத்துக்கு இதை போடுங்கோ. இப்போவே நீங்க alright, but இந்த drops is for preventive” என்றார். எனக்கு என்னாலையே நம்ப முடிய வில்லை. என்னடா இது ஒரே சிட்டிங்கல சரி பண்ணிட்டாரே என்று அவருக்கு “ரொம்ப தேங்க்ஸ் சார் .. “ என்றேன் .. அவரும் “தேங்க்ஸ் எதுக்கு சார் .. எல்லாம் நாமளே பண்றதா மனுஷா நினச்சிண்டு இருக்கா. ஆனா அது தப்பு. எல்லாம் பகவான் பண்றான்.. நாம எல்லாம் வெறும் கருவிகள் தான் அவனுக்கு.. அவ்வளவு தான் . Smile a lot.. it cost’s nothing’ என்று ஒரு மினி அட்வைஸ் மற்றும் பிரசங்கம் கொடுத்து விட்டு reception வரை வந்து வழி அனுப்பினார். இப்போ நீங்க ஏரோ பிளேன் கூட ஓட்டலாம். அவ்வளவு பக்காவா இருக்கு உங்க பார்வை என்று சொன்னார்.

நான் ஒரு மாதம் பட்ட அவஸ்தையை இவர் 30 நிமிடத்தில் குணம் ஆக்கி விட்டார். எங்கு இருக்கிறது தவறு ? எனது அருமை நண்பர்களே.. நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்




  • ஒரு பெரிய ஆஸ்பத்ரியின்பெயரை வைத்து கொண்டு, வீதிக்கு வீதி ஆஸ்பத்திரி நடத்தும் இந்த corporate முதலைகளிடம் சிக்கி கொள்ளாதீர்கள். அகர்வால் கண் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. இந்த புகழை பயன்படுத்தி அவர்கள் சென்னையின் பல இடங்களில் ஆஸ்பத்திரி ஓபன் செய்தார்கள் /செய்து கொண்டு இருக்கிறார்கள். பெரும் அளவில் விளம்பரம், மிகவும் பிரமாண்டமாக ஆஸ்பத்ரியை கட்டி கல்லா கட்ட பார்கிறார்கள். ஆனால் அவர்களால் எல்லா ஆஸ்பத்திரியையும் திறமையாக நிர்வாகம் பண்ண முடியவில்லை . நல்ல மருத்துவர்கள் கிடைப்பதில்லை. தனியாக கிளினிக் ஓபன் பண்ணி கல்லா கட்ட திறமை இல்லாத மருத்துவர்கள் தான் இங்கு வேலைக்கு சேர்கிறார்கள். இவர்களால்4 வாரம் ஆகியும் என் கண் வலியை குண படுத்த முடியவில்லை.


  • இது அகர்வாலுக்கு மட்டும் தான் என்று இல்லை . நேற்று மருந்து வாங்க அப்போல்லோ Pharmacy, இந்திரா நகர் , அடையாறு சென்றேன் . doctor Prescription பார்த்து மருந்து எடுத்து தர அங்கு வேலை செய்பவர்களால் முடிய வில்லை .


  • எனக்கு தெரிந்து Dr. Bathras, KKNR, Dr. Mohans, என்று பல கிளைகள் உள்ள எல்லா மருத்துவமனையிலும் இதே நிலை தான்.



  • இப்பொழுது இதை போல் pre-school chain தெருவுக்கு தெருவு வந்து கொண்டு இருக்கிறது. இங்கும் இதே நிலை தான். இதை பற்றி பின்பு தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

முடிந்த வரை, இதை போல உள்ள chain of ஆஸ்பத்ரியில் சிக்காமல் சாதுர்யமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் . !

குறிப்பு : எனது கண்கள் குணமானதற்கு பெரிய பாளையத்தம்மன் பிரார்த்தனை தான் காரணம் என்று எனது மாமியார் சொல்கிறார். இதில் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும் அவரது நம்பிக்கையை புண்படுத்த விரும்ப வில்லை. :-)

3 கருத்துகள்:

Blogger kala கூறியது…

very nice blog.thanks for the information.Gayatri suresh

27 டிசம்பர், 2011 அன்று 9:05 AM  
Blogger Vetirmagal கூறியது…

நல்லகாலம், நீங்கள் வெறு டாக்டரிடம் காண்பித்தீர்கள்.
அந்த நல்ல டாக்டரின் பெயரோ மகவரியோ எழுத வில்லையே!

30 ஜனவரி, 2012 அன்று 10:29 AM  
Blogger Vetirmagal கூறியது…

oops, sorry for the spelling mistakes. Keyboard problem!

30 ஜனவரி, 2012 அன்று 10:30 AM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு