ஞாயிறு, 21 ஜூன், 2009

கதை எழுத போறேன்!

சார், என் பேர் வெங்கடாசலம். பேர் கேட்டுட்டு இவன் ஏதோ பழய காலத்து ஆளுன்னு சட்டுன்னு ஒரு முடிவிக்கு வந்துட கூடாது. எங்க தாத்தா பேர எனக்கு வச்சுட்டாரு எங்க அப்பா. மத்தபடி நான் இந்த காலத்து ஆளுங்க சார், நம்புங்க. சொந்த ஊரு நாகர்கோயில். ஆனால் உங்கள்ள பல பேரு மாதிரி மெட்ராஸ் வந்து செட்டில் ஆகி ஒரு பத்து வருழம் ஆச்சுங்க. ஒரு IT கம்பெனில வேலை செய்யறேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். இங்க பாருங்க சார், நான் இங்க என் சொந்த கதைய சொல்ல வரல. ஒரு முக்கியமான மேட்டர பத்தி உங்க கிட்ட பேசலாமுன்னு வந்து இருக்கேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க சார்.

இந்த காலத்துல வெகு ஜன எழுத்தாளர்கள் ரொம்ப கம்மிங்கறது என் அபிப்பிராயம் சார். மக்கள் விரும்பி படிக்கற எழுத்தாளர்கள் யாரு சார் இப்போ இருக்காங்க.? விரல் விட்டு எண்ணிடலாம். அந்த காலத்துல (ஆரம்பிசிடான்யா) கல்கி, சாவி, தி.ஜானகிராமன் அப்படின்னு ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. எழுத்தால ஒரு ராஜ பாட்டையை போட்டு வச்சு இருந்தாங்க. இப்போ யாரு சார் இருக்காங்க ? சுஜாதானு ஒரு புண்ணியவான் இருந்தாரு. அவரும் போயி சேந்துட்டாரு. அதுக்காக நான் இப்போ எழுத்தாளர்களே இல்லன்னு சொல்ல வரல. நான் இங்க பேசறது வெகுஜன எழுத்தாளர்கள பத்தி மட்டும் தான். இலக்கியம் அப்படிங்கற போர்வையில சில எழுத்தாளர்கள் இருக்காங்க சார். ஆனா யாருக்கு அவங்க எழுதறது புரியறது.? எஸ்.ராமகிருஷ்ணன் அப்படின்னு ஒரு எழுத்தாளர் இப்போ எழுதறார். ரொம்ப அருமையா தான் எழுதறாரு. ஆனா புரிய தான் மாட்டேன்கிறது. "இரவு அடையாளம் அழிந்து போன நதி. அதன் சீற்றம் நாம் அறியாதது. துடுப்புகள் இல்லாமலே அதில் நாம் பயணம் செய்ய இயலும். பசுவின் காம்பிலிரிந்து பால் சொட்டிக்கொண்டிருப்பது போன்று பிரபஞ்கத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டி வடிந்து கொண்டேயிருக்கிறது..... ". உங்களுக்கு இதன் அர்த்தம் ஏதாவது புரிகிறதா? ஒவ்வரு வரியையும் குறைந்தது மூன்று முறை படித்தால் தான் சில தடவை கொஞ்சமாவது புரியுது. இன்னொரு எழுத்தாளர் இருக்கிறார் அவர் பெயர் ஜெயமோகன். இவருடைய எழுத்துக்களை நான் படித்தது இல்லை சார். ஏன்னா இந்த ஆள் ஒரு பெரிய சைக்கோநு கனிமொழி அம்மா ஒரு மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. மக்களுக்கு புரியற மாதிரி எழுதறதுக்கு இப்போ யாரும் இல்லைங்கறது என் அபிப்பிராயம் சார். வெகு ஜனத்தை போய் சேராத எதுவும் பெரிதாக ஜெயுக்க முடியாது. அதுக்காக நான் இலக்கியம் தப்புன்னு சொல்ல வரல சார். எனக்கு புரியல.. அவ்வளவு தான். கதை படிச்சா உடன மனசுல போய் ஒட்டிக்கணும். இன்னிக்கும் சுஜாதாவுடைய "நகரம்" அப்படிங்கற சிறுகதைய மக்கள் ஞாபகம் வச்சு இருக்காங்க சார். அறுபதுகளில் எழுதின கதை. இன்னிக்கும் அது பொருந்தும். இன்னிக்கும் மக்கள் கல்கி, சாவி எழுதின கதைகளை தேடி போய் படிக்கறாங்க.. இன்னிக்கு யாரு சார் அப்படி எழுதறாங்க ?

அதுக்காக நான் ஒட்டுமொத்தமா எழுத்தாளர்களை குத்தம் சொல்ல வரல சார். படிக்கறவங்க கொறஞ்சு போய்ட்டாங்க. அதையும் நாம ஒதுக்கணும் சார். எத்தனை தமிழ் குழந்தைகள் "தமிழ் எனக்கு பேச தான் தெரியும்.. கதை எல்லாம் எனக்கு புரியாது.. எழுத்து கூட்டி படிக்க ரொம்ப நேரம் ஆகும்... ஹார்ரி போட்டேர் தான் எனக்கு பிடிச்ச புக்" அப்படின்னு சொல்ல நீங்க கேட்டு இருக்கீங்க.? இப்படி நமது தலை முறை டிவி, ஆங்கில நாவல்கள் அப்படின்னு மாறிகிட்டு இருக்கும்போது நாமளும் ரொம்ப இலக்கிய தரமான நாவல்களை எழுதின அவங்க எப்படி சார் படிப்பாங்க. ?

நான் முன்னமே சொன்ன மாதிரி கதை எளிதாக இருக்கணும் சார். அதில் கொஞ்சம் நகைசுவை இருக்கணும். அதற்குள் ஒரு கருத்து இருக்கணும். அப்போ தான் அது மக்களை போய் சேரும்.. என்ன சார் சொல்றீங்க நீங்க ? இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. ? பொன்னியின் செல்வன் மொத்தம் ஐந்து பாகம். 3000 பக்கங்களுக்கு மேல். இன்னிக்கு ஐந்தாவது தலைமுறை தேடி போய் படிக்குது. கதை நா இப்படி இருக்க வேண்டாமா சார்.

இப்போ தான் எனக்கு சர்ச்சில் சொன்னது ஞாபககுக்கு வருது சார். "நாடு என்ன உனக்கு பண்ணினது கேக்காத டா.. டுபுக்கு.. நீ ஏதாவது பண்ணுடா நாட்டுக்கு மொதேல்ல". ரொம்ப ஞாயமான கேள்வி சார் இது. போயும் போயும் இப்போ தான் எனக்கு இது ஞாபககுக்கு வரணுமா? ஆனா வந்துருச்சே ... அது தான் சார்.. நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். ஆமாம் சார்... நானே கதை எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். சார்.. சிரிக்காதீங்க சார். நான் எழுதினா யாரு புப்ளிஷ் பண்ணுவாங்கனு கேக்கறீங்களா? யாரும் பண்ண வேணாம். எனக்கு ஒரு blogஇருக்கு. அதுல நானே புப்ளிஷ் பண்ணிப்பேன். நாலு பேருக்கு மெயில் அனுப்பி torture பண்ணி படிக்க வச்சுடுவேன். ஒரு படி மேல போய் அவங்கள கமெண்ட் கூட போஸ்ட் பண்ண வச்சுடுவேன் . அது ஒரு பெரிய மேட்டர் இல்ல. இப்படி சிரிக்காதீங்க சார். ப்ளீஸ். ஒரு வளர எழுத்தாளன அதுவும் ஒரு வெகு ஜன எழுத்தாளன மட்டம் தட்டாதீங்க சார். நல்ல இருப்பேங்க. நீங்க தட்டி கொடுக்கலைனா கூட பரவ இல்ல சார். இத மாதிரி கேவலமா சிரிக்காதீங்க. போய் என் blog படிச்சு பாருங்க சார். அதுல உள்ள கமெண்ட்ஸ் படிங்க. என் நண்பன் ஒருத்தன் படிச்சிட்டு.. "ரொம்ப நல்ல எழுதறடா. நீ ஏன் "கதை சொல்லிகள்" கிளுப்ள சேர கூடாதுன்னு கேட்டான் சார்.

இவர விடுங்க சார்.. சிரித்தவர் வாழ்ந்ததில்லை சரித்தரம் சொல்கிறது. நான் எங்க விட்டேன் ... ஆங்.. நான் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஆமா சார். உங்கள மாதிரி ஒரு இரண்டு பேர் படிச்சா கூட போதும். இப்போ நானும் எழுதறத விட்டுட்டேன்னா அப்புறம் யாரு சார் வெகு ஜனம் படிக்கற மாதிரி கதை எழுதறது. அதுனால கதை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. கடந்த ரெண்டு வாரமா ரொம்ப யோசிக்கறேன்.. எத பத்தி கதை எழுதலாம்னு. கதைக்கு ஒரு கரு வேணும். முன்னமே சொன்ன மாதிரி கொஞ்சம் ஹாஸ்யம் வேணும்.. அப்புறம் சொல்லவந்த கருத்த வாழ பழத்துல ஊசிய சொருகற மாதிரி மெதுவா சொல்லணும். எல்லாம் ரெடி சார். ஆனா கதைக்கு கரு மட்டும் இது வரைக்கும் எனக்கு செட் ஆகல. எத யோசிச்சாலும் அத இதுக்கு முன்னாடி யாரோ எழுதி இருக்காங்க. நானும் ரொம்ப யோசிச்சு பாக்கறேன் .. ஒன்னும் செட் ஆகா மாட்டேங்கது. இத பாருங்க சார்.. இலக்கியம்.. அப்படின்னு வந்துட்ட.. அது வேற மாதிரி.. புகுந்து விளயடிடலாம். வெகு ஜன கதை பாருங்க .. அது தான் சார்.. கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு.

சார்.. இவ்வளவு நேரம் இத பொறுமையா படிச்சதுக்கு நன்றி. என்னுடைய குறிக்கோள் என்னனு தெளிவா சொல்லிட்டேன் உங்க கிட்ட. உங்க கிட்ட ஏதாவது கதை கரு இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்க சார். புகுந்து விளையாடிடலாம். நாம தான் இந்த வெகு ஜனங்களுக்கும், தமிழுக்கும் ஏதாவது பண்ணனும். என்ன சார் சொல்றீங்க நீங்க ?

4 கருத்துகள்:

Blogger Balasubramaniam A.G. கூறியது…

Good Idea. Welcome u'r decision. will try to find some untold karu.

Ethukku sir evalavuuuuuuuu sir.

21 ஜூன், 2009 அன்று 10:52 PM  
Blogger Ramya கூறியது…

kalakku po...all the very best!

22 ஜூன், 2009 அன்று 9:02 AM  
Blogger Unknown கூறியது…

plzzzzzzzz try to post in english as well...:)

25 ஜூன், 2009 அன்று 11:40 PM  
Blogger Unknown கூறியது…

வெகுஜன மக்களுக்காக எழுதுவதை தொடரவாழ்த்துகள்..s.ராமகிருஷ்ணன் பத்தி நீங்க சொன்னது சில சமயம் உண்மை.சில சமயம் புரிந்து கொள்வது கடினம்.ஆனா அவரோட கட்டுரைகள் எல்லாமே அருமையா இருக்கும்.:)..write more stories.Unga thirunelveli nagara vaalkkai pathi elunthungalen-kathai karu

18 நவம்பர், 2009 அன்று 5:19 AM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு