உலகமயமாக்கலும் நானும்!
அடுத்த 5 ஆண்டுகளில் இதன் விளைவை இந்தியா உணர ஆரம்பித்தது. மக்கள் கையில் காசு புரள ஆரம்பித்தது . 5 இலக்க சம்பளம் சாதரணமானது. 6 இலக்க சம்பளமும் சாத்தியமானது. 30 வருடம் அரசாங்க பணியில் பணி புரிபவர்கள் கூட முக்கு முக்குவென முக்கி 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் போது அவரது மகன் /மகள் முதல் மாத சம்பளமாக 15 ஆயிரம் வாங்கியது பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தாலும் காதில் புகையையும் வரவழைத்து. நடுத்தர மனிதனுக்கு விமானம் சாத்தியமானது. ரயில்வேயை தவிர தொலைபேசி, மின்சாரம், வங்கி என்று அனைத்து துறைகளிலும் தனியார்கள் புகுந்தார்கள். நல்ல தரமான சேவை மலிவான விலையில் கிடைத்தது. வங்கியில் 100 ரூபாய் எடுக்க 1/2 நாள் விடுப்பு எடுத்து வங்கியில் வரிசையில் நிற்க வேண்டும் என்ற நிலை மாறி இரவு 10 மணிக்கு கூட ATM உதவியது. நடுத்தர வர்கத்திற்கு 30 வயதில் சொந்த வீடு வாங்க முடிந்தது. 80 ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கவும், 40 ரூபாய் மசால் தோசை சாப்பிடவும் முடிந்தது. ஏராளமான பண புழக்கத்தால் வங்கியிடம் கை இருப்பு அதிகமானது. வங்கி தாரளமாக எல்லாருக்கும் கடன் வழங்கியது. இளைஞர்கள் கையில் காசு புரள ஆரம்பித்தது . சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இந்த பொருளாதார கொள்கையும் உலகமயமாக்கலும் நடுத்தர வர்க்கத்தை மேல்தட்டு நடுத்தர வர்கமாக (upper middleclass) உசத்தியது. இந்தியாவை உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரும் நாடக மாற்றியது. ஆண்டுக்கு 8 சதவீத நிகர வளர்ச்சி விகிதம் (GDP) சாத்தியமானது. ஆனால் இந்த பொருளாதார தாரளமயமாக்கல் எந்த விதத்திலும் ஏழைக்கு உதவ வில்லை. விலைவாசி உயர்வு(inflation) கட்டுகடங்காமல் போனது. ஒரு சமயத்தில் உச்ச பட்சமாக 14 % எட்டியது (நேதேர்லண்டில் இது வெறும் 1.6% தான்). இந்தியாவின் கடைசி குடிமகன் ரொம்பவும் சிரமப்பட்டான்.
இந்தியர்களின் அயராது உழைப்பு, புத்திசாலித்தனம், குறைந்த ஊதியம் எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய ஆங்கிலம், இவை மேல்நாட்டவரை மிகவும் கவர்ந்தது. இந்த உலகமயமாக்கல் மற்றும் தாரளமயமாக்கல் அவர்களுக்கு மிகவும் உதவியது. தமது back office, callcenterகளை இந்தியா நெடுகிலும் ஆரம்பித்தார்கள். அமெரிக்காவில் firdge வேலை ஆகவில்லை என்று ஒரு அமெரிக்கன் phone செய்கிறான்..அந்த phone எடுக்கும் ஒருவன் தன்னை Brain Spencer (american name) என்று அறிமுக படுத்திக் கொண்டு அமெரிக்கா ஆங்கிலத்தில் பேசுகிறான். Fridge சரி செய்ய ஆள் அனுப்புவதாக கூறுகிறான். இவனுக்கு பதில் அளித்தது பெங்களூரில் உள்ள சுப்பிரமணி என்று அவன் அறிந்து இருக்க சாத்தியம் இல்லை. ஒரு மிக பெரிய நிறுவனத்தின் வாடிக்கை சேவை மையம் முழுதும் இந்தயாவில் இயங்கி வருகிறது. ஆனால் இதை அமெரிக்கா வாடிகயாளர்கள் அறிந்து இருக்க சாத்தியமில்லை. நம்மவர்கள் பகலில் தூங்கி இரவில், அமெரிக்கா விழித்து இருக்கும் போது விழித்து இருந்து வேலை செய்கிறார்கள். அனைவரது உண்மையான பேர்கள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஆங்கில பேர்கள் சூட்டப்படுகின்றன. அமெரிக்கா ஆங்கிலம் கற்று தரப்படுகிறது. முழு வாடிக்கையாளர் சேவை மையம் இந்தியாவில் இயங்குவதால் அந்த நிறுவனத்திற்கு எக்க சக்கமாக செலவு குறைகிறது. நம்மவர்களுக்கு 5 இலக்க சம்பளம் கிடைக்கிறது.
BPO, Call centere ஒரு புறம் என்றால், மறுபுறம் IT மிக பிரமாண்டமாக வளர தொடங்கியது. IBM, Accentrue என்று அனைத்து கம்பனிகளும் இந்தியாவில் கிளைகளை திறந்தன. ஏன்..Microsoft ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் மிக பெரிய அலுவலகத்தை திறந்தது. ITkku ஏக கிராக்கி உருவானது. எந்த துறையில் பட்டம் வாங்கி இருந்தாலும் சரி அவர்கள் IT பால் இழுக்க பட்டனர். MBA, CA என்று அனைவரும் IT வசப்பட்டனர். onsite என்று சொல்லி, பலருக்கும் மேல்நாடுகளில் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிட்டியது. பலர் அமெரிக்கா சென்று, வந்த வேலையை விட்டு விட்டு புது வேலை தேடி அங்கேயே settle ஆக ஆரம்பித்தனர். அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியது.
இப்படி IT பால் இழுக்கப்பட்ட இன்னொரு ஜீவன் தான் நான்.! இந்த IT கம்பெனிகளுக்கு நாளடைவில் இருக்கின்ற தொழிலாளிகள் எல்லாம் போத வில்லை. நாடு எங்கிலும் இருந்து அதிக சம்பள ஆசை காட்டி அனுபவமுள்ள மக்களை தன் பால் இழுக்க ஆரம்பித்தார்கள். நான் வேலை செய்யும் அலுவலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இருந்தும் அவர்களுக்கு ஆள் போத வில்லை. இன்னும் இன்னும் என்று மக்களை தேடி பிடித்து சேர்க்கிறார்கள். எடுத்த பிறகு தான் அவர்களை வைத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். சென்னையை சேர்ந்த என்னை ஹைதராபாத் உள்ள projectkku அனுப்புகிறார்கள். அங்குள்ளவர்கள் என்னை புனேக்கு அனுப்புகிறார்கள்.. அங்கிருந்து என்னை Netherlands அனுப்பினார்கள் .. இங்கிருந்து என்னை spain போய் வா என்று சொல்கிறார்கள். இது சாதரணம் IT கம்பனிகளில். எல்லாம் சரி ..எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை இவர்கள் உணர்ந்தார்களா? இங்கு மூன்று மாதத்திற்கு மேல் எதையும் திட்ட மிட முடியவில்லை. இன்று நான் இங்கு இருக்கிறேன் .. 3 மாதத்திற்கு பிறகு நான் எங்கு இருப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது மேல் அதிகாரியை கேட்டால் அவருக்கும் தெரிய வில்லை என்கிறார். கொஞ்சம் சத்தமாககேட்டால் நீ இந்தியா வந்துவிடு என்கிறார். இந்தியா என்றால் எங்கு??? இந்தியா என்ன சிறிய நாடா ?.. சரி நான் சென்னைக்கு வந்து விடுறேன், நீ சென்னையில் project கொடு என்றால் முடியாது, வேண்டுமானால் பெங்களூர் தருகிறேன் என்று பேரம் பேசுவார். சரி ஏதோ ஒன்று.. ஒரு இடத்தில் ஒட்கார்ந்து கொழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்து மனைவிக்கும் இங்கு மாற்றம் வங்கி வேலையை ஆரம்பித்தால், அமெரிக்காவில் ஒரு வாய்ப்பு இருக்கிறது போகிறாயா என்று ஆசை காட்டுகிறார்கள். நாமும் வெளி நட்டு மோகத்திற்கு ஆசை பட்டு பெட்டியை தூக்குகிறோம். இதில் மனைவிமார்கள் கதி தான் மிகவும் பரிதாபம். கல்யாணத்திற்கு முன்பு வரை நல்ல கம்பனிகளில் வேலை பார்த்து வருபவர்கள், ITyil வேலை செய்யும் ஒருவனை கல்யாணம் செய்து கொண்டால் ..அவ்வளவு தான்.. இங்கு இருந்து ஆரம்பிக்கறது ஆபத்து. ஊர் ஊராக பயணம் செய்யும் கணவனுக்காக வேலையை தியாகம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ள படுகிறார்கள். அவர்களுடைய படிப்பு, அறிவு எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு, கணவனையும், குழந்தையும் கவனித்து கொள்ள தயாராக வேண்டிய நிலைமை. இவர்கள் இந்த சமரசத்துக்கு ஒத்து கொள்ளாத பட்சத்தில், இருவரும் தனித்து வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ள படுகிறார்கள். இது நரகம்!. என்னுடைய நிலைமையும் இது தான் !. உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன் என்று மிரட்டும் அதிகாரிகள் இனிமேல் ஒரு மாறுதலுக்காக உன்னை IT கம்பனிக்கு மாற்றி விடுவேன் என்று மிரட்டலாம்.
இந்த உலகமயமாக்கலிலும் நவீன பொருளாதாரத்திலும் விற்கப்பட்ட அடிமை நான். இதை கூற எனக்கு வெக்கமோ, கூச்சமோ எதுவும் இல்லை. இது நானாக தெரிந்ததே எடுத்த முடிவு. என்னால் இங்கிருந்து பின்வாங்க முடியாது. இந்த ஆடம்பரத்திற்கு நான் பழகி விட்டேன். ஒரு காலத்தில் நானும் என் மனைவியும் சேர்ந்து 1 லட்சம் மாதம் சம்பாதித்தோம் ..இது ITyaal மட்டுமே சாத்தியமானது. என்னால் இனிமேல் எனது பெற்றோர்கள் போல் மாதம் 5000 ரூபாய்க்கு குடும்பம் நடத்த தெரியாது. தெரிந்தே போட்டு கொண்ட விலங்கு இது. இப்பொழுது புலம்பி எந்த உபயோகமும் இல்லை.
இந்த உலகமயமாக்கலிலும் இந்தியாவின் நவீன பொருளாதாரத்திலும் எனது "Permanent Address"ai தொலைத்து விட்டு நிற்கிறேன். என்னுடைய Permanent address எது என்று கேட்டால் எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்பதை வெக்கத்தை விட்டு சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்குறேன். ஆனால் நான் இங்கு தனித்து விட படவில்லை . என்னுடன் லட்ச கணக்கானவர்களும் permanent address தொலைத்து விட்டு நிற்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் கொள்கிறேன். இந்த உலகமயமாக்கலில் என்னுடைய கதி மிகவும் பரிதாபத்திற்குரியது. உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்டோர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் ..என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?
லேபிள்கள்: உலகமயமாக்கல், IT